Last Updated : 17 Jul, 2018 10:30 AM

 

Published : 17 Jul 2018 10:30 AM
Last Updated : 17 Jul 2018 10:30 AM

ஆங்கிலம் அறிவோமே 222: சிந்தாம சாப்பிடச் சொல்லிக் கொடுத்திருக்காங்க!

கேட்டாரே ஒரு கேள்வி

ஒருவரை வேலையை விட்டு நீக்குவதற்கும் கோடரி, கோணி ஆகியவற்றுக்கும் உள்ள ஆங்கிலத் தொடர்பு என்ன?

-------------------------

Trunk என்பது ஒரு மரத்தின் கிளைகளைக் குறிக்கிறதா அல்லது தண்டுப் பகுதியைக் குறிக்கிறதா?

வாசகரே, ஒரு மரத்தின் கிளைகள், வேர்களை நீக்கிவிட்டால் மிஞ்சி இருக்கிற பகுதிதான் trunk. இதேபோல கை கால்களும் தலையும் நீக்கப்பட்ட மனித /விலங்கு உடலையும் trunk என்பார்கள்.

யானையின் துதிக்கையையும் trunk என்பார்கள். (யானையின் பிளிறலில் இருந்ததுதான் trunk-call என்ற சொல் வந்ததா என்று யாரும் கேட்டு விடாதீர்கள்).

Trunk பெட்டி எவ்வளவு பெரிய பெட்டி என்றும் அதற்குத் தாழ்ப்பாள் இருக்கும் என்பதும் நம்மைவிட நம் தாத்தா பாட்டிகளுக்கு அதிகமாகவே தெரியும்.

கார் டிக்கி என்று நாம் குறிப்பிடுவதை ஆங்கிலத்தில் boot என்பார்கள். வட அமெரிக்காவில் இதை trunk என்று அழைப்பதுண்டு.

-------------------------

‘கேட்டாரே ஒரு கேள்வி’யில் வாசகர் எழுப்பிய கேள்வியைப் பார்த்து, நான் ஒரு கணம் திகைத்து திகைப்பூண்டை வேறு மிதித்தேன்! பிறகு விளங்கியது.

அதாவது, He has been axed என்றோ He is sacked என்றோ சொல்கிறோம் அல்லவா அதைத்தான் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்!

பேச்சு வழக்கில் வேலையில் இருந்து ஒருவரை நீக்குவதை ‘sack’ என்று குறிப்பிடுகிறோம். The employer sacked the employee என்றால் இதுதான் அர்த்தம்.

Sack என்பது ஒருவகையில் கைவிடுவதையும் குறிக்கும். ஆக employee கூட employer-ஐ sack செய்யலாம்!

‘Hit the sack’ என்ற phrase-க்கு ‘தூங்கச் சொல்’ என்று பொருள். Sack out என்றாலும் இதே அர்த்தம்தான். ஆனால், இப்படியெல்லாம் பேச்சு வழக்கில்தான் பயன்படுத்துகிறார்கள்.

200 staff were axed என்றாலும் இதே அர்த்தம்தான். 200 பேரை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்கள்.

To have an axe to grind என்றால் ஏதோ ஒரு சுயநல நோக்கம் இருக்கிறது என்று அர்த்தம். Nobody is selfless. Everyone has an axe to grind.

-------------------------

“I am sorry. I offended you – I should have lied” என்ற வாக்கியத்தை ஒரு நூலில் படித்து அசந்து போனேன். உங்களிடம் இதைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது” என்று எழுதி இருக்கிறார் வாசகர் ஒருவர்.

நன்றி நண்பரே, இதே போன்ற அர்த்தம் பொதிந்த அதேநேரம் நகைச்சுவையான வேறொன்று எனக்கும் நினைவுக்கு வருகிறது.

I am reading a very interesting book about anti-gravity. I just can’t put it down.

-------------------------

Table manners என்றால் என்ன?

Dining table manners என்றுதான் இதற்குப் பொருள். His table manners were not met up to the mark.

மிகுந்த ஒலியுடன் சாப்பிடுவது, உணவு வேளையில் பிறர் தட்டில் எச்சில் தெறிக்கும் அளவுக்குப் பேசுவது என்பதெல்லாம் மோசமான table manners.

ஆனால், சில நேரம் table manners என்பது மாறுபடும். இது தொடர்பாக ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் நினைவுக்கு வருகிறது.

‘சாப்பிடும்போது நாப்கினை மடிமேலே விரிச்சு வச்சுக்கணும்னு உங்க வீட்டிலே யாரும் சொல்லிக் கொடுக்கல்லையா?”

‘இல்லை அங்கிள். ஆனால், கீழே சிந்தாம சாப்பிடச் சொல்லிக் கொடுத்திருக்காங்க”.

மேஜை இல்லாமல் தரையில் உட்கார்ந்து சாப்பிடும்போதுகூட நமக்கேற்ற ‘table manners-ஐக் (!)’ கடைப்பிடித்தல் நன்று.

-------------------------

“ஒரு பிரச்சினை கடினமானதாக இருந்தால் அதைக் குறிப்பிடும்போது complex issue என்று குறிப்பிட வேண்டுமா அல்லது complicated issue என்று குறிப்பிட வேண்டுமா? Tricky issue, ticklish issue என்பவற்றின் பயன்பாடு குறித்தும் கூறுங்களேன்” என்கிறார் வாசகர் ஒருவர்.

Complex issue அல்லது complex problem என்றால் அதில் பலதரப்பு விஷயங்கள் அடங்கி உள்ளன. எடுத்துக்காட்டாக: ஒரு புதிய மாறுதலை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் அது குறித்துத் தெளிவு வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை அதை ஏற்கச் செய்ய வேண்டும். அந்த மாறுதலைச் செய்வதற்கான திறமையை அவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். இவையெல்லாம் கடினமானதாக இல்லை என்றால்கூட அது complex issue தான்.

ஆனால், இவற்றைச் செய்வதில் பெரும் தடைகள் உண்டு. அதற்காக அதிகமான உழைப்பைப் போட வேண்டும் என்றெல்லாம் இருந்தால் அது complicated issue ஆகிவிடும்.

“அப்படியானால் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் உருவாவது complex issue. சேலம் எட்டுவழிச் சாலையை நடைமுறைப்படுத்துவது complicated issue என்று கூறலாமா?” என்று கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது.

பொதுவாக complicated என்ற சொல்லைத் தினசரி வாழ்விலும், complex என்ற சொல்லைக் கொஞ்சம் தொழில்நுட்பரீதியாகவும் பயன்படுத்துகிறோம்.

Ticklish issue என்றால் அது கவனமாகக் கையாள வேண்டிய ஒன்று. அதாவது நன்கு யோசித்து சாதுர்யமாக விடையளிக்க வேண்டும் மற்றும் செயல்பட வேண்டும்.

Tricky issue என்றால் இப்படிக் கூறலாம். Euthanasia is a very tricky subject and should be handled with extreme care. அதாவது கருணைக் கொலை என்பது இருபுறமும் கூர்மையான கத்தி போன்ற பிரச்சினை. எந்தப் பக்கத்தை ஆதரித்தாலும் எதிர்த்தரப்பிலிருந்து நியாயமான கேள்விகள் எழாமல் போகாது.

-------------------------

தொடக்கம் இப்படித்தான்

Jeep என்ற சொல்லின் ஒரு தொடக்கம் காமிக்ஸிலிருந்து வந்தது. Popeye என்ற கார்ட்டூன் பாத்திரம் மிகப் பிரபலம். கடல் பயணம் நிறையச் செய்பவர் அவர். அந்தப் பாத்திரத்தைப் படைத்த ஈ.ஸி.செகர் என்பவர் ‘யூகன் தி ஜீப்’ (Eugene the Jeep) என்ற பாத்திரத்தையும் படைத்தார். அது ஒரு வித்தியாசமான விலங்கு. மாய சக்திகள் கொண்டது. அந்தப் பெயர் பலருக்கும் பிடித்துவிட்டது. முக்கியமாக ‘ஜீப்’ என்ற பகுதி.

ராணுவத்தில் உடலுக்குப் பொருத்தமான ‘கோட்’டையும் அதை அணிபவரையும் ‘ஜீப்’ என்று கூறத் தொடங்கினார்கள். (ராணுவ வீரர்களிடையே Popeye பாத்திரம் மிகப் பிரபலம்). பின்னர் ராணுவ வாகனங்களை jeep என்று குறிப்பிடத் தொடங்கினார்கள். ஒரு காலகட்டத்தில் பிரபல மோட்டார் கார் நிறுவனமான ‘கிரிஸ்லர் குழு’ Jeep என்ற பிராண்டைத் தன் வசமாக்கியது. அதற்கு முன்னால் American Motor Corporation என்ற நிறுவனம் இதைத் தன்வசம் வைத்துக்கொண்டிருந்தது. மற்றபடி அது போன்றே உருவாக்கப்பட்ட பலவகை வண்டிகளையும் jeep என்றே குறிப்பிடத் தொடங்கினார்கள்.

That sort of people is nice to talk with. Those sort of people is nice to talk with. இந்த இரண்டில் எது சரி?

சிப்ஸ்

# That sort. Sort என்பது ஒருமை.

சில சொற்களுக்கு முன் ‘in’ என்பதைச் சேர்த்தால் அது எதிர்ச்சொல்லாகிவிடுகிறது. இதுபோல வேறு ஏதாவது முன்னொட்டுகள் உள்ளனவா?

# Im (improper), In (Irrational), Un (Untie), Anti (Anti-clockwise).

Costume என்றால் உடைதானே?

# நடிகரின் உடை செட்.

ஆங்கிலம் அறிவோமே 220வது பகுதியில் வாசகர்களுக்கான போட்டியில் பன்னிரண்டு குறிப்புகள் கொடுத்துவிட்டு அவை உணர்த்தும் டி.வி.சானல்களின் பெயரைக் கேட்டிருந்தோம். கேள்விகளும், விடைகளும் இதோ.

1. ‘Ha Ha Ha’ in Tamil - சிரிப்பொலி

2. Very large – மெகா

3. Potassium - கே (பொட்டாஷியம் என்பதன் வேதியல் குறியீடு).

4. An American comic strip, created by cartoonist Walt Kelly – போகோ

5. Nylon is an example of this - பாலிமர்

6. Kalady reminds him – சங்கரா

7. A rainbow is known for these - கலர்ஸ்

8. Tamil equivalent of a service no more available in India – தந்தி

9. Person in command of a ship – கேப்டன்

10. Nelumbo nucifera – தாமரை (தாமரையின் தாவரவியல் பெயர்)

11. Finding something that had not been known before – டிஸ்கவரி

12. At the centre of the solar system - சன்

முதலில் வந்து சேர்ந்த, முழுவதும் சரியான விடைகளை அனுப்பிய வாசகர்களின் பட்டியல் இது.

1. S.கிருஷ்ணன், வேளச்சேரி, சென்னை.

2. R.சேதுராமன், கோவில்பட்டி

3. ஹேமலதா ஞான செந்தில், திருச்சி 1

4. A. அசன் ஜஸியா, துரைப்பாக்கம், சென்னை

5. அமரா அதிபன், புவனகிரி

6. முகிலன், மதுரை

7. நீ.சுவாமிநாதன், கோயம்புத்தூர்

8. எஸ்.சுமதி, சேலம்

9. கார்த்திகா ராமச்சந்திரன், மரவனேரி, சேலம்-7

10. P. ஷெர்புதீன், கடலூர்

11. ரெ. செல்வ சங்கர், கிழக்கு தாம்பரம், சென்னை

12. S.J. டேனியல் கேப்ரியல், கோயமுத்தூர்

13. N. கலைசெல்வன், புதுக்கோட்டை

14. பார்கவி வா.சி., அந்தியூர், ஈரோடு

15. வாணி ஸ்ரீனிவாசன், அந்தியூர், ஈரோடு

16. கெவின் ஜோன்ஸ், திருநெல்வேலி

17. ரஜினி பெலுவா ஷோபிகா, செந்தாமரை கலை அறிவியல் கல்லூரி, மதுரை.

18. ஜெயகர், முத்தையாபுரம், தூத்துக்குடி

19. ரமேஷ், ஈரோடு

20. டாக்டர் பி.சுப்புலட்சுமி, திண்டல், ஈரோடு

21. எஸ்.சுப்பிரமணியன், சாலிகிராமம், சென்னை

ஏழாம் குறிப்புக்கு சிலர் வானவில் என்பதை விடையாக அளித்திருக்கிறார்கள். ஆனால் குறிப்பில் ‘these’ என்ற வார்த்தை கொடுக்கப்பட்டிருந்ததால் அந்த பதில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 12ம் கேள்விக்கு ‘ஆதித்யா’ என்ற விடையும், இரண்டாவது குறிப்புக்கு Max என்ற பதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எட்டாவது குறிப்புக்கு ‘தமிழன்’, ‘மக்கள்’ ஆகிய விடைகளை எழுதி இரு வாசகர்கள் அதிர்வுகளை ஏற்படுத்தினர்.

போட்டியின் சுவாரசியம் குறித்துப் பாராட்டிய அனைத்து வாசகர்களுக்கும் நன்றி.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x