நினைத்ததை நிறைவேற்றும் திருக்கோவிலூர் திரிவிக்கிரம பெருமாள்

நினைத்ததை நிறைவேற்றும் திருக்கோவிலூர் திரிவிக்கிரம பெருமாள்

Published on

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் திருகோவிலூர் (திருக்கோவலூர்) திரிவிக்கிரம (உலகளந்த) பெருமாள் கோயில் 42-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் திருமாலும், துர்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். மூலவரின் திருமேனி மரத்தால் ஆனது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீமத் பாகவதம் என்ற நூலில் உள்ள எழுத்துகளின் வடிவில் தானே அந்த நூலுக்குள் உறைவதாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரே உரைத்திருக்கிறார். அப்படிப்பட்ட கிருஷ்ணரின் விருப்பத் தலங்களாக ஐந்து தலங்களைக் கூறுவதுண்டு. அவை திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கபிஸ்தலம், திருக்கண்ணபுரம் மற்றும் திருக்கண்ணமங்கை ஆகும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in