எல்லாரும் ஜிம்முக்குப்  போகலாமா? | இதயம் போற்று 34

எல்லாரும் ஜிம்முக்குப்  போகலாமா? | இதயம் போற்று 34
Updated on
4 min read

‘உடற்பயிற்சி என்பது இதயத் துக்கு நாம் செய்யும் மரியாதை’ (Exercise should be regarded as tribute to the heart) என்றார் அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர்ஜெனி டன்னி. ‘உடற்பயிற்சிக் கூடங்கள் சிறந்த உடல்தகுதிக்கும் இதய ஆரோக்கி யத்துக்கும் உறுதி கொடுக்கும் இடங்கள்’ என்றுதான் நாமும் காலங்காலமாகச் சொல்லி வருகிறோம். ஆனால், சமீப காலமாக உடற்பயிற்சிக் கூடங்களில் மாரடைப்பு ஏற்படும் போக்கு இந்த எண்ணங்களைச் சந்தேகப்பட வைக்கிறது. 46 வயதே ஆன கன்னட நடிகர் புனித் ராஜ்குமா ரும், 24 வயதே ஆன சென்னை மருத்துவர் அன்விதாவும் ஜிம் பயிற்சியின்போது உயிரிழந்ததை இங்கே நினைவுகூரலாம்.

ஜிம் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் மாரடைப்பை ஏற்படுத்துமா? இந்தக் கேள்விக்கு இன்றைய இளையோர் மிரட்சியுடன் பதில் தேடிக்கொண்டிருக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், ‘உடல்தகுதி அறிந்து ஜிம்முக்குச் சென்றால், அளவோடு பயிற்சி செய்தால், இதய நலம் மேம்படும்; மாரடைப்பு ஏற்படுவதில்லை’ - இதுதான் என் பதில். இதைக் கொஞ்சம் விரிவாகவே பார்த்துவிடலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in