

இந்தியாவின் சுற்றுச்சூழல் குறித்த ஆண்டுத் தொகுப்பு நூலான 'State of India’s Environment 2025' நூலை டில்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழலுக்கான மையம் வெளியிட்டுள்ளது. 'டவுன் டுர் எத்' என்கிற மாதம் இருமுறை சுற்றுச்சூழல் இதழை வெளிக்கொண்டுவரும் நிறுவனம் இது.
12ஆவது ஆண்டாக வெளிவந்துள்ள இந்தத் தொகுப்பு நூல் சுற்றுச்சூழல் குறித்த சமீபத்திய பார்வைகள், அறிவியல் புரிதல், புதிய போக்குகளைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இந்தத் தொகுப்பில் ஞெகிழி, உயிர்ப் பன்மை, மருத்துவம், காலநிலைப் பேரிடர், ஆறுகள், தண்ணீர், வெப்பம், காற்று மாசுபாடு, திடக்கழிவு மேலாண்மை, தொழிற்சாலைக் கழிவு, உணவு உள்ளிட்ட துறைகள் சார்ந்து தனிக்கவனம் செலுத்தப் பட்டுள்ளது.