

குடிப்பழக்கப் பிரச்சினையிலிருந்து துப்புரவாக மீள்வது என்பது பலருக்கும் சாத்திய மற்றதாகவே இருக்கிறது. விளக்கின் வெளிச்சம் விட்டில் பூச்சிகளை வீழ்த்துவதுபோல் மதுவின் மயக்கம் மனிதர்களை வீழ்த்துகிறது.
“இன்றிலிருந்து குடிக்க மாட்டேன்; வருடப் பிறப்பிலிருந்து குடியை நிறுத்திவிட்டுப் புது வாழ்க்கை வாழப்போகிறேன்; பிறந்த நாள் ‘பார்ட்டி’ யோடு ‘குவார்ட்ட’ருக்கு குட்பை!” என்றெல்லாம் குடிநோயாளிகள் சபதம் எடுப்பார்கள். ஆனால், சந்தர்ப்பச் சூழ்நிலைகள் மாறும்போது, மறுபடி சபலம் தட்டும். இன்றைக்கும் மட்டும் ஒரு ‘கட்டிங்’ என்று ஆரம்பிப்பார்கள். அப்புறம், குடிபோதையை நோக்கி மாரத்தான் ஓட்டம் ஓடுவார்கள்.