Published : 18 Jul 2018 10:52 AM
Last Updated : 18 Jul 2018 10:52 AM

விடுகதைகள்: மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்!

1. மூன்று பெண்களுக்கும் ஒரே முகம். மூத்தப் பெண் ஆற்றிலே, நடுப் பெண் காட்டிலே, கடைசிப் பெண் வீட்டிலே! அவர்கள் யார்?

2. ஓடுவான், மூடுவான், ஒன்றைக் காலில் நிற்பான். அவன் யார்?

3. ஆயிரம் அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மிட்டாய்க் கடை. அது என்ன?

4. விதைக்காத விதை மண்ணிலே; அறுக்காத கதிர் விண்ணிலே. அது என்ன?

5. தண்டு மேலே தாழி, தாழிக்குள்ளே எண்ணெய், எண்ணெய்க்குள்ளே கொடி, கொடிக்கு மேலே பூ. அது என்ன?

6. விட்டம் போட்டு வீடு கட்டியும், விசிறி மாட்ட இடம் இல்லை. அது என்ன?

7. பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல்; உள்ளே கறுப்பு ராஜா. அது என்ன?

8. தொங்குது கீழே கொம்பு; தொட்டால் வருமே வம்பு. அது என்ன?

18chsuj_vidu.jpg

- அ,மு. அக்‌ஷயா, 4-ம் வகுப்பு, பிவிஎம் குளோபல் பள்ளி, திருச்சி.

விடைகள்

1. முதலை, உடும்பு, பல்லி,

2. கதவு,

3. தேன்கூடு,

4 சூரியன்,

5. குத்துவிளக்கு,

6. மூக்கு,

7. சீதாப்பழம்,

8. யானைத் தந்தம்.

 

1. குண்டு முழி ராஜாவுக்குக் குடல் எல்லாம் பற்கள். அது என்ன?

2. கோணலாக இருந்தாலும் குணமும் சுவையும் குன்றாது. அது என்ன?

3. யாரும் ஏற முடியாத மரம்; கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்?

4. விழுந்தால் படுக்காது; எழுந்தால் நிற்காது. அது என்ன?

5. பொட்டுப்போல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும். அது என்ன?

- ஜா. பாத்திமா,10-ம் வகுப்பு, மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவை.

விடைகள்

1. மாதுளை,

2. கரும்பு,

3. வாழை,

4. தலையாட்டி பொம்மை,

5. முருங்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x