Published : 04 Jun 2018 11:08 AM
Last Updated : 04 Jun 2018 11:08 AM

பேட்டரி சைக்கிள் தயாரிப்பில் ஜெர்மன் நிறுவனம்

ட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜெர்மனியின் ஷேப்ளர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஷேப்ளர் இந்தியா நிறுவனம், பேட்டரி சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

பேட்டரியில் இயங்கும் வகையிலான இந்த சைக்கிள் நான்கு சக்கரங்களைக் கொண்டதாக, சைக்கிள் ரிக்ஷாவைப் போலிருக்கும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தர்மேஷ் அரோரா கூறியுள்ளார். இணையதள பொருள்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனத்தினருக்காக இது வடிவமைக்கப்படுகிறது.

தற்போது ஆன்லைன் நிறுவனங்களான ஸ்விகிஸ், பிளிப்கார்ட் ஆகியவற்றின் டெலிவரி பணியாளர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் மிகப் பெரிய பைகளை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.

இதற்கு மாற்றாக இந்த பேட்டரி சைக்கிள் இருக்கும். சுற்றுச் சூழலை பாதிக்காத வகையிலான இந்த பேட்டரி வாகனங்களை ஆன்லைன் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்காக வாங்கும் என்று எதிர்பார்க்கிறது. இந்தியாவில் போக்குவரத்துக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளையும் ஷேப்ளர் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் இது. நிறுவனம் ஏற்கெனவே இத்தகைய சைக்கிளுக்கான உதிரிபாகங்களை தருவித்துவிட்டது. இவற்றை அசெம்பிள் செய்து விற்பனைக்கு விட வேண்டியதுதான் எஞ்சியுள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x