Published : 24 Jun 2018 12:20 PM
Last Updated : 24 Jun 2018 12:20 PM

நமைச்சலைத் தடுக்கும் பூவரசு

பூவரசம் பட்டையை அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் படை, நமைச்சல் குணமாகும்.

ரோஜா இதழ்கள் நீண்ட நேரம் உதிராமல் இருக்க நடுவில் ஒரு துளி தேங்காய் எண்ணெய் விட்டால் உதிராது.

பழைய புத்தகங்களைப் பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலை தூவினால் பூச்சிகள் வராது.

உடல் உஷ்ணத்தால் ஏற்பட்ட வயிற்று வலி, நீர்க்கடுப்பு போன்ற பிரச்சினைகள் குணமாகஇளநீரில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம்.

வெங்காயத்தோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால் பித்த உபாதைகள் நீங்கும்.

கடுக்காய்த் தூளை ஒரு சிட்டிகை அளவு பசும் பாலில் கலந்து இரவில் படுக்கச் செல்லும் போது குடித்து வந்தால் இதயம் பலம் பெறும்.

வாழைப் பூவைப் பொடியாக நறுக்கி அதனுடன் முருங்கைக் கீரையை வதக்கிச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும், நீரிழிவுக்கு நல்ல மருந்து.

துணிகளில் பேனா மை பட்டுவிட்டால் எலுமிச்சைச் சாறு தேய்த்தால் கரை காணாமல் போய்விடும்.

- அ. பவானிஅச்சுதன், வயலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x