

உங்கள் வாழ்க்கையை வேலை, பணத் தேவை என எந்த கவலையும் இல்லாமல், நிதானமாக உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வாழ்வது குறித்து யோசித்து இருக்கிறீர்களா? நிதிச் சுதந்திரம் மூலமே அப்படி ஒரு வாழ்க்கையை அடைய முடியும் இல்லையா? அந்த நிதிச் சுதந்திரத்தை சாத்தியப்படுத்துவதுதான் ஐசிஐசிஐ புருடென்சியல் ஃப்ரீடம் எஸ்ஐபி.
ஃப்ரீடம் எஸ்ஐபி ஒரு தனித்துவமான திட்டம். முறையான முதலீட்டுடன் உங்கள் சொத்தை பெருக்கவும், தேவைக்கு ஏற்ப மாதாந்திர அடிப்படையில் பணத்தை பெறவும் இந்தத் திட்டம் வழி செய்கிறது.
திட்டத்தை பயன்படுத்துவது எப்படி? - எஸ்ஐபி திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு எவ்வளவு ஆண்டுக்கு நீங்கள் முதலீடு மேற்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பணத்தை மாதாந்திர அடிப்படையில் திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் எவ்வளவு தொகையை திரும்பப் பெற விரும்புகிறீர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். இலக்கு வைத்து முதலீடு செய்வதற்கு ஃப்ரீடம் எஸ்ஐபி மிகச் சிறந்த திட்டமாகும்.
நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வதற்கான பழக்கத்தை ஏற்படுத்துவதோடு, எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்யப்போகிறோம் என்பதை நாமே தேர்வு செய்வதற்கான வாய்ப்பையும் அது வழங்குகிறது. தவிர, நம்முடைய பணத் தேவை, ரிஸ்க் எடுக்கும் மனநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வேறு வகையான மூல மற்றும் இலக்குத் திட்டங்களையும் அதில் தேர்வு செய்துகொள்ள முடியும்.