Published : 14 Jul 2024 11:51 AM
Last Updated : 14 Jul 2024 11:51 AM

ப்ரீமியம்
பெண் எனும் போர்வாள் 33: தென்னிந்தியாவின் ‘சகோதரி ’

தனக்கு நடந்தது திருமணம் என்பதுகூடப் புரியாத சின்னஞ்சிறு வயதில் கணவனின் முகத்தைக்கூட அறிந்திராத நிலையில் சுபலட்சுமி கைம்பெண் ஆனார். பருவமடையாத வயதிலேயே கணவனை இழந்து குடும்பத்தினராலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்படும் ஆயிரக்கணக்கான பெண்களின் தலையெழுத்தை மாற்ற சுபலட்சுமி நினைத்தார். கைம்பெண்களின் விதி இதுதான் எனச் சமூகம் கற்பித்து வைத்திருந்த மூடத்தனங்களை மீறி, கல்வி பயின்று, கைம்பெண்களுக்காக அவர் தொடங்கிய ‘சாரதா இல்லம்’ பின்னாளில் சாரதா வித்யாலயா என்கிற பள்ளியாகப் பரிணமித்தது.

குழந்தைத் திருமணங்களால் தானே இளவயதுக் கைம்பெண்கள் அதிகரிக்கிறார்கள்? அதனால் குழந்தைத் திருமண ஒழிப்பில் முனைப்புடன் செயல்பட்டார். குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யும் ‘சாரதா சட்டம்’ சுபலட்சுமியின் அயராத உழைப்பின்றிச் சாத்தியப்பட்டிருக்காது. காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியல் செயல்பாடுகளிலும் சுபலட்சுமி ஈடுபட்டார். அவர் பயிற்றுவித்த பிரசிடென்சி பள்ளியில் இறைவணக்கத்தின் போது ஐரோப்பிய தேசபக்திப் பாடல்களும் அவர்கள் பாணியிலான விளையாட்டுப் பயிற்சிகளும் நடைபெற்றன. அதற்கு மாற்றாக வரிகளை மாற்றிப் போட்டு பாடிய துடன் கும்மி, கோலாட்டம் எனத் தமிழகப் பண்பாட்டுக் கலைகளை மாணவி களுக்குப் பயிற்றுவித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x