Published : 28 May 2018 11:37 AM
Last Updated : 28 May 2018 11:37 AM

இந்த காரின் விலை ரூ. 2.33 கோடி

கோ

டீஸ்வரர்கள் தங்களின் அந்தஸ்தைப் பறைசாற்றிக் கொள்வதற்காகவே ஆடம்பரமான கார்களை வாங்குகின்றனர். கோடீஸ்வரர்களைக் குறிவைத்து சொகுசு கார்களை சில நிறுவனங்கள் தயாரிக்கின்றன. சொகுசு கார்களை தயாரிக்கும் டொயோடா குழுமத்தின் அங்கமான லெக்ஸஸ் பிராண்டின் புதிய எஸ்யுவி மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 2.33 கோடியாகும்.

இந்த எல்எக்ஸ் 570 மாடல் கார் 5.7 லிட்டர் வி 8 பெட்ரோல் இன்ஜினை கொண்டதாகும். கோடீஸ்வரர்களைக் கருத்தில் கொண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் லெக்ஸஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் என் ராஜா.

இந்த காரில் ஏராளமான சொகுசு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மிகவும் இனிமையான இசையை வழங்க 19 ஸ்பீக்கர்கள் உள்ளன. 11.6 அங்குல எல்சிடி திரை உள்ளது. இது செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்) முறையில் செயல்படும். பின் இருக்கையில் அமர்ந்து இனிமையான இசை, படங்களைப் பார்க்க முடியும்.

சாலைப் பயணம் மற்றும் சாகசப் பயணங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. நான்கு சக்கர சுழற்சி கொண்டதாக இருந்தாலும் இன்ஜினின் வேகம், பிரேக் கட்டுப்பாடு ஆகியன ஒரு முகமாக உள்ளன. தொழில்நுட்பத்தின் மேம்பட்ட அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இது வெளிவந்துள்ளது.

காரின் மூன்றாவது வரிசை இருக்கையைத் தேவைப்பட்டால் மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே கம்பீரமான தோற்றத்தைக் கொண்டதாக இது உள்ளது. இதில் உள்ள வசதிகள் நிச்சயம் சவுகர்யமான பயணத்தை அளிக்கும் என்று நம்பலாம்.

இதுவரை டீசல் மாடல் எஸ்யுவிக்களை தயாரித்து வந்த லெக்ஸஸ் முதல் முறையாக பெட்ரோலில் இயங்கும் எஸ்யுவியை எல்எக்ஸ் 570 என்ற பெயரில் தயாரித்துள்ளது. முந்தைய மாடலை விட இதன் பெட்ரோல் டாங்க் சற்று பெரியது. இதில் 138 லிட்டர் வரை நிரப்ப முடியும். காரின் நான்கு பகுதிகளில் குளிர்ச்சி சீராக பரவும் வகையில் ஏசி நிறுவப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக இதில் 10 ஏர் பேக்குகள் உள்ளன.

இதில் 7.7 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்ட முடியும். முந்தைய மாடலான 450 டி-யில் 100 கி.மீ. வேகத்தை எட்ட 8.6 விநாடிகள் ஆகும். அந்த வகையில் இது விரைவான பயணத்துக்கு உதவிசெய்யும். டிரைவர் இருக்கையை தேவைக்கேற்ப 10 வெவ்வேறு கோணங்களில் அட்ஜெஸ்ட் செய்யலாம். இது 525 பிஹெச்பி மற்றும் 625 நியூட்டன் மீட்டரை கொண்ட 5 லிட்டர் இன்ஜினை கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x