

ஜூன் 8: ஈநாடு குழுமத் தலைவரும் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் நிறுவனருமான ராமோஜி ராவ் (88) உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார்.
ஜூன் 8,9: பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் பட்டம் வென்றார்.
ஜூன் 9: தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசுப் பணிகளுக்கான குரூப் 4 தேர்வில் 7,242 மையங்களில் 15.88 லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஜூன் 9: இரண்டாவது முறையாக சிக்கிம் முதல்வராகத் தேர்வான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங்குக்கு ஆளுநர் லஷ்மண் பிரசாத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜூன் 9: டெல்லியில் நடைபெற்ற புதிய அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடிக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள் உள்பட 71 பேர் பதவியேற்றனர். ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மோடி பிரதமரானார்.
ஜூன் 11: நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மருத்துவக் கலந்தாய்வுக்குத் தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஜூன் 12: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக பவன் கல்யாண் உள்பட 23 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றனர்.
ஜூன் 12: ஒடிஷாவின் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த சரண் மாஜிக்கு ஆளுநர் ரகுபர்தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2 துணை முதல்வர்கள் உள்பட 13 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
ஜூன் 12: குவைத்தில் மாங்காப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் உள்பட 149 பேர் உயிரிழந்தனர்.
ஜூன் 13: அருணாச்சலப் பிரதேச முதல்வராக மூன்றாவது முறையாக பெமா காண்டுவுக்கு ஆளுநர் கைவல்ய திரிவிக்ரம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொகுப்பு: மிது