Last Updated : 03 Apr, 2018 10:55 AM

 

Published : 03 Apr 2018 10:55 AM
Last Updated : 03 Apr 2018 10:55 AM

ஃபேஸ்புக்கில் ‘எலெக்ட்ரானிக்ஸ் டிப்ஸ்’ தரும் ஆசிரியர்!

 

ய்வுபெற்றாலும் தான் கற்ற கல்வியை நவீன சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கொண்டுசெல்ல ஃபேஸ்புக்கில் ‘எலெக்ட்ரானிக்ஸ் டிப்ஸ்’ என்ற பக்கத்தில் எழுதிவருகிறார் விஜயரங்கன். புதுச்சேரி மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக்கில் பணியாற்றி ஓய்வுபெற்ற விரிவுரையாளரான இவருக்கு 71 வயது. தொடர்ந்து எலெக்ட்ரானிக்ஸ் புத்தகங்களைப் படித்து அவற்றை எளிமைப்படுத்தி சுவாரசியமான வடிவில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவருகிறார்.

29CH_விஜயரங்கன்விஜயரங்கன்தேர்ச்சி அடைந்து என்ன பயன்?

“ஓய்வுபெற்ற பிறகு பொழுதை உபயோகமாகக் கழிக்க விரும்பினேன். மகன் வாங்கித் தந்த கணினியும் மாணவர்கள் பரிசளித்த ஸ்மார்ட் ஃபோனும் இருந்ததால், அவற்றை மாணவர்கள் நலனுக்காக பயன்படுத்தலாமே என்று யோசித்தேன்” என்கிறார் விஜயரங்கன்.

பொறியியல், இளநிலை அறிவியல் படிப்புகளில் எலெக்ட்ரானிக்ஸ் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்துவருகிறது. அவர்களில் பலரும் தேர்ச்சியும் அடைந்துவிடுகிறார்கள். ஆனால், எலெக்ட்ரானிக்ஸ் பாடத்தின் அடிப்படைகள்கூடத் தெளிவாக அறியாத நிலையில் பல மாணவர்கள் இருப்பது விஜயரங்கனைக் கவலைகொள்ளச்செய்தது.

“படிப்புக்கு ஏராளமான தொகையைப் பெற்றோர் செலவழித்தாலும், எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் வெற்றிவாய்ப்பை இழக்கும் சூழல் அதிகரித்துள்ளதைப் பலரும் சொல்லக் கேள்விப்பட்டேன். இதனால் எலெக்ட்ரானிக்ஸ் பற்றிச் சில கட்டுரைகள் எழுதி மாணவர்களிடம் பகிர்ந்தேன். அதைப் படித்துவிட்டு, இன்னமும் எளிமைப்படுத்தி எலெக்ட்ரானிக்ஸின் அடிப்படைகளைச் சுருக்கமாகப் பதிவிடும்படி கேட்டுக்கொண்டார்கள். இதையடுத்து ஸ்மார்ட்ஃபோன், கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு பேஸ்புக்கில் ‘எலெக்ட்ரானிக்ஸ் டிப்ஸ்’ பக்கத்தைத் தொடங்கினேன்” என்கிறார்.

புத்தகம் அல்ல கையேடு

இதை அடுத்து, தினந்தோறும் இரவில் படித்தவற்றை அடுத்த நாள் காலையில் மாணவர்களுக்குப் புரியும் வகையில் சிறு குறிப்புகளாக எழுதத் தொடங்கினார். தேர்வில் வென்ற பலரும் அடிப்படைத் தகவல்கள் தெரியாததால் நேர்முகத் தேர்வைச் சந்திக்கவே அச்சப்படும் சூழல் உள்ளதால், அவர்களுக்கு பயன்படும் வகையிலும் தகவல்களை அளிக்க ஆரம்பித்தார்.

படிக்கும் பாடத்தின் அடிப்படைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் சவால்களைச் சந்திக்க அச்சப்பட வேண்டியதில்லை. அதனால் நான் கற்றுத் தேர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் பாடங்களின் அடிப்படைகளை மாணவர்களுக்கு கற்றுத்தருவதை நோக்கமாக்கினேன். மீண்டும் பாடப் புத்தகம்போல எழுதிவிடக் கூடாது என்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தினேன். ஆகவே, ‘எலெக்ட்ரானிக்ஸ் டிப்ஸ்’ பாடத்துக்கான கையேடாக உருவாக்கிவருகிறேன்” என்கிறார்.

இதில் எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான தியரி, வரைபடம், பிராக்டிக்கல் பாயிண்ட், பிராக்ட்டிகல் படங்கள், போட்டித் தேர்வு பாணியில் கேள்வி-பதில், எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டுவருகிறார். இப்பக்கம் நிச்சயம் தேர்வு எழுதப்போகும் எலெக்ட்ரானிக்ஸ் மாணவர்களுக்கும் நேர்முகத் தேர்வைச் சந்திக்கச் செல்லும் மாணவர்களுக்கும் பயத்தைப் போக்கும்.

ஓய்வு பெற்ற பிறகு தனது வாழ்வை மாற்றிக்கொண்டதுடன் மாணவர்களுக்கும் தொடர்ந்து உதவும் இந்த டிஜிட்டல் ஆசிரியருக்கு வாழ்த்துகளும் நன்றியும் குவிகின்றன.

எலெக்ட்ரானிக்ஸ் டிப்ஸுக்கு: https://www.facebook.com/ Electronics-TIPS-2009053996032688/

ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கு 0.8 சதவீதம்

யுனெஸ்கோ புள்ளியியல் அமைப்பு செய்த ஆய்வின்படி, இந்தியா, தனது ஜி.டி.பி.யில் 0.8 சதவீத்தை மட்டுமே அறிவியல் ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்குகிறது. அத்துடன் பத்து லட்சம் பேர்ல் 156 ஆராய்ச்சியாளர்களுக்கே அரசு உதவி அளிக்கிறது. சீனா 2 சதவீதம் ஒதுக்கி பத்து லட்சம் பேரில் ஆயிரத்து 113 ஆராய்ச்சியாளர்களுக்கு அந்நாட்டு அரசு உதவியளிக்கிறது. ஜெர்மனி 2.9 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்து 4363 ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது. அமெரிக்க அரசு 2.8 சதவீதம் நிதி ஒதுக்கி 4 ஆயிரத்து 231 ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x