Published : 23 Apr 2018 10:09 AM
Last Updated : 23 Apr 2018 10:09 AM

ட்வின் டிஸ்க் பல்சர் அறிமுகம்

ஜாஜ் நிறுவனத் தயாரிப்புகளில் இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற மாடல் ஒன்று உண்டென்றால் அது பல்சர்தான்.

ஆரம்ப காலத்தில் இதில் சில குறைகள் கூறப்பட்டாலும், அவை படிப்படியாக நிவர்த்தி செய்யப்பட்டு இளைஞர்கள் முதலில் தேர்வு செய்யும் வாகனமாக பல்சர் திகழ்கிறது.

காலத்திற்கேற்ப பல்வேறு வடிவமைப்புகள், அதிகத் திறன் என மாற்றங்களை செய்துவரும் பஜாஜ் நிறுவனம் தற்போது ட்வின் டிஸ்க் பிரேக் கொண்ட பல்சரை அறிமுகப்படுத்தியுள்ளது. வாகனத்தின் பிரேக் திறனை இது மேம்படுத்துவதோடு ஓட்டுபவரின் பாதுகாப்பு அம்சத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

தொடக்கத்தில் முன் சக்கரத்தில் மட்டுமே டிஸ்க் பிரேக் வசதியுடன் பல்சர்கள் வந்தன. 2018 மாடலில் பின் சக்கரத்திலும் டிஸ்க் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. 230 மி.மீ விட்டம் கொண்ட டிஸ்க் பின்புறத்தில் உள்ளது. தனித் தனி இருக்கைகள் கொண்டதாகவும், முந்தைய மாடலைக் காட்டிலும் பின் சக்கரத்தின் விட்டம் அதிகம் உள்ளதாகவும் புதிய மேம்படுத்தப்பட்ட மாடல் வெளிவந்துள்ளது. டயர்களின் விட்டம் அதிகமாக உள்ளதால் சவுகர்யமான பயணத்தையும், பின்புற டிஸ்க் பிரேக் இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு அம்சமும் அளிக்கிறது. நியூ பல்சர் 150 தற்போது மூன்று கண்கவர் வண்ணங்களில் (நீலம், சிவப்பு, குரோம்) வெளிவந்துள்ளது.

முந்தைய மாடல்களில் உணரப்பட்ட சிறிய அளவிலான சப்தம், அதிர்வு ஆகிய அனைத்து அம்சங்களும் இதில் சரி செய்யப்பட்டுள்ளன. விலை ரூ. 78,016.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x