Published : 16 Feb 2018 11:56 AM
Last Updated : 16 Feb 2018 11:56 AM

உங்கள் இல்லத்திற்கு அழகான வண்ணங்களை தேர்ந்தெடுங்கள்

KFCல் ஏன் முழுவதுமாக சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுளது என்று எண்ணியதுண்டா?

காரணம் இருக்கிறது. சிவப்பு நிறம் பசியை தூண்டுவதாகவும், சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் உண்டாக்குகிறது.

யோசித்துப் பாருங்கள்! ஒரு வண்ணத்தால் ஒரு பக்கட் சிக்கன் விங்ஸ் வாங்க தூண்ட முடியும் என்றால், அது எத்தகைய தாக்கத்தை நம் வீட்டில் உண்டாக்க முடியும் என்று?

வீட்டில் வண்ணங்கள்

நம் மனநிலை, சிந்தனைகள், உத்வேகம் ஆகியவற்றை வண்ணங்கள் தீர்மனிக்கும் என்பதை பலர் ஏற்பதில்லை. சரியான வண்ணங்களின் உபயோகிப்பதன் மூலம் உங்களின் சிந்தனைகளயும் எண்ணங்களையும் சரியாக நேர்படுத்த முடியும்.

பெரும்பாலான நேரத்தை நாம் வீட்டில் செலவழிப்பதால், நம் வீட்டின் உபயோகிக்கும் வண்ணங்களில் கொஞ்சம் கவனம் செலுத்துதல் நன்மை பயக்கும்.

வீட்டில் வண்ணம் அடிக்கும் முன், வண்ணங்கள் சார்ந்த சொற்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

# ஹுயு (Hue) – ஹுயு என்பது ஒரு வண்ணம். சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்கள் ஹுயு எனப்படும். லைட் அல்லது டார்க் என்பதை பொருத்து இதன் மதிப்பு அமையும்.

# சாசுரேஷன் (Saturation) – ஹுயுவின் ஆதிக்கம் என்பதே சாசுரேஷன். உதாரணதத்திற்கு ஒரு அறையில் சிவப்பு நிறமும் பிங்க் நிறமும் நிறைந்து காணப்பட்டால், பிங்க் வண்ணத்தின் ஆதிக்கம் இருக்கும்.

# இன்டன்சிடி (Intensity) – இது வண்ணத்தின் திறமை. கோபால்ட் நீலம் அல்லது அடர்த்தியான சிவப்பு ஆகிய நிறங்கள் லைட் மஞ்சளை விட திறமை அதிகம் உள்ளதாக இருக்கும்.

இந்த முக்கியமன் சொற்களை அறிந்த பின், இதோ உங்கள் வீட்டின் வண்ணங்களை தேர்வு செய்வதை பற்றி சில குறிப்புகள்.

வண்ணத்தை இறுதியாக தேர்ந்தெடுங்கள்

நம்மில் பெரும்பாலானவர்கள் முதலில் வண்ணத்தை தேர்ந்தெடுத்துவிட்டு அதன் பின்னர் அறைகளுக்கான டிசைன்களை பற்றி முடிவெடுக்கிறோம். இது தவறான அணுகுமுறை. வண்ணத்திற்கிற்கு ஏற்ற மாதிரி திரைச்சீலை, உள் அலங்காரங்கள் அமைப்பது கடினம்.

அதற்கு பதிலாக எல்லாவற்றையும் அமைத்த பிறகு வண்ணமடிப்பது சிறந்தது. திரைச்சீலைகளுக்கு ஏற்றது போல் வண்ணங்களை தேர்ந்தெடுத்தல் மேலும் அழகூட்டும்.

உங்களுக்கு பிடித்த நிறத்தை தேர்ந்தெடுக்காதீர்!

உங்களுக்கு பிடித்தமான நிறம் என்பதால் உங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் என்றில்லை. ஆகவே உங்களுக்கு பிடிக்கும் என்பதால் வண்ணத்தை தேர்ந்தெடுக்காதீர்கள்.

உதராணத்திற்கு உங்களின் தூங்கும் அறையை எடுத்துக் கொள்வோம். அந்த அறை அமைதியானதாக இருக்க வேண்டுமா இல்லை உற்சாகத்தை தரவல்ல நெருக்கத்தை உணர வைக்கும் சூழல் வேண்டுமா?, சாஃப்டான குளிர்சியான நிறங்கள் (நீலம், பச்சை) நிம்மதியான சூழலை உருவாக்கும், இதுவே அடர்த்தியான நிறங்கள் (சிவப்பு) இறுக்கமான சூழ்லை உருவாக்கலாம்.

முழு வீட்டையும் கருத்தில் கொள்ளுங்கள்

வீட்டை பெயின்ட் செய்யும் பொழுது, அனைத்து அறைகளையும் கருத்தில் கொண்டு கலைநயத்தோடு உணருங்கள். ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்கையில் நிறத்தின் தொடர்சி நேர்த்தியாக அமைகிறதா என்றும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு அறையின் நிறத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற மன ஓட்டத்தில், அடுத்த அறைக்கான தொடர்சி நிறம் எப்படி அமைய வேண்டும் என்றும் நினைக்க வேண்டும். இவை ஒன்றுக்கொன்று எடுபடுமா என்றும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒற்றை நிறத்தை முயலுங்கள்

ஒரு ஹுயு நிறத்தை மட்டும பயன்படுத்துகையில் அந்த அறையே அழகாக அமையும். அதே சமயத்தில் ஒரு ஹுயு நிறத்தை உபயோகிக்கும் பொழுது அறையின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பூச்சு நிலை கொடுக்கும் பொழுது, நேர்த்தியாக அமையப்பெறும்.இது போல் வெவ்வேறு பூச்சு நிலை, அறையின் அழகை உயர்த்திக்காட்டும்.

கலர் வீல்

வீட்டில் வண்ணத்தை திட்டமிடுகையில், இந்த நான்கு குறிப்புகளை கருத்தில் கொண்டால் ரம்யமான அழகை பெறலாம். மேலும், கலர் வீலின் மேற்கோள்படி திட்டமிடலும் நன்மை பயக்கும்.

கலர் வீலில் அடுத்தெடுத்து உள்ள நிறத்தை பயன்படுத்தும் பொழுது, அதில் ஒரு நிறம் மற்றதை விட பளிச்சென்று இருக்கும். சிவப்பு, பச்சை என கலர் வீலில் எதிர்எதிரில் அமைந்துள்ள நிறங்கள் ஒன்றுகொன்று ஈடுகொடுத்து அழகாக அமையும்.

நிறத்தின் குளிர்ச்சி நிறத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீலம், பச்சை, ஊதா போன்ற குளிர்ச்சியான நிறத்தை பயன்படுத்தும் பொழுது, அறை காற்றோட்டமாக இருக்கும். சிவப்பு, ஆரஞ்ச் போன்ற நிறங்கள் பளிச்சென்று தோற்றத்துடன், அதில் வசிப்பவர்களையும் புத்துணர்சியூட்டும்.

சரியான பெயின்ட்டை தேர்ந்தெடுங்கள்

இறுதியாக, சரியான வண்ணத்தை தேர்ந்தெடுப்பது அவசியம். ஆயில் அல்லது லேடக்ஸ் பெயின்ட் என இரண்டு வகை உள்ளது. எதை உபயோகிக்க வேண்டும் என்பது சுவற்றின் தன்மையை பொருத்து முடிவெடுக்க வேண்டும்.

# லேடக்ஸ் பெயின்ட் இலகுவாக சுத்தப்படுத்த இயலும், ஆயில் பெயின்ட்டை விட நீடிக்கும் தன்மை வாய்ந்தது. சீக்கிரம் வண்ணத்தை இழக்காது என்பதால் லேடக்ஸ் பெயின்ட் உபயோகிப்பது நல்லது.

# ஆயில் பெயின்ட் மரத்திலான மேற்பரப்பு கொண்டவைகளுக்கு ஏற்றதாக இருக்கும். மரத்தின் மீதான கறை, செதில்கள் போன்றவற்றை மறைக்க ஆயில் பெயின்ட் உதவும். ஆனால் ஆயில் பெயின்ட் காய்வதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பளிச்சென இருக்கட்டும்

ஒரே மாதிரியான நிறத்தை தேர்வு செய்யாமல், புதிய பளிச்சான நிறத்தை முயற்சி செய்யுங்கள். ஒரு சுவர் என்று ஆரம்பித்து படிப் படியாக கூட புது வண்ணங்களின் முயற்சியை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு செய்கையில் முற்றிலும் புதிய விதமான உங்களின் ஸ்டைலை பிரதிபலிக்கும் வீடாக கூட அமையக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x