Published : 05 Feb 2018 12:00 AM
Last Updated : 05 Feb 2018 12:00 AM

பங்குச் சந்தைகள்

ஒரு நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு வளர வேண்டுமெனில் புதிய முதலீடுகள் அவசியம். முதலீட்டாளர்களே மீண்டும் மீண்டும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பதிலாக தங்களது நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவீத உரிமையை பிரித்து, அதனை விற்பதன் மூலம் முதலீடுகளை திரட்டிக் கொள்ள முடியும். அந்த விதம் நிறுவன பங்கு உரிமையை விற்பதற்காக உருவாக்கப்பட்ட மையம்தான் பங்குச் சந்தைகள். நிதி திரட்டுவதற்கான பழமையான இந்த நடவடிக்கை ஒழுங்குபடுத்தப்பட்டு இப்போது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக திகழ்கிறது.

உலகின் மிகப் பெரிய நிறுவனங்களாக வளர்ந்துள்ள, வால்மார்ட், எக்ஸோன் மொபில், கோக கோலா உள்ளிட்ட நிறுவனங்கள்கூட ஆரம்பத்தில் பங்குச் சந்தைகளில் நிதி திரட்டியதன் மூலம் வளர்ச்சியடைந்தவைதான். உலகின் மிக முக்கிய பங்குச் சந்தைகளின் பட்டியல்:

உலகின் முக்கியமான பங்குச் சந்தைகள் - மதிப்பு பில்லியன் டாலர்

நியூயார்க் பங்குச் சந்தை

சந்தை மதிப்பு : 19,223

ஆண்டு :224

வர்த்தகமாகும் பங்குகள் : 2400

/

நாஸ்டாக்

சந்தை மதிப்பு : 6631

ஆண்டு :45

வர்த்தகமாகும் பங்குகள் : 3058

/

லண்டன் பங்குச் சந்தை

சந்தை மதிப்பு : 6187

ஆண்டு :215

வர்த்தகமாகும் பங்குகள் 3041

/

டோக்கியோ பங்குச் சந்தை

சந்தை மதிப்பு : 4485

ஆண்டு :138

வர்த்தகமாகும் பங்குகள் 2292

/

ஷாங்காய் பங்குச் சந்தை

சந்தை மதிப்பு : 3986

ஆண்டு :26

வர்த்தகமாகும் பங்குகள் 1041

/

ஹாங்காங் பங்குச் சந்தை

சந்தை மதிப்பு : 3325

ஆண்டு :125

வர்த்தகமாகும் பங்குகள் 1866

/

யூரோநெக்ஸ்ட்

சந்தை மதிப்பு : 3321

ஆண்டு :16

வர்த்தகமாகும் பங்குகள் 1299

/

டோரண்டோ பங்குச் சந்தை

சந்தை மதிப்பு : 2781

ஆண்டு :155

வர்த்தகமாகும் பங்குகள் 1524

/

பாம்பே பங்குச் சந்தை

சந்தை மதிப்பு : 1682

ஆண்டு :141

வர்த்தகமாகும் பங்குகள் 5749

/

பிராங்க்பர்ட் பங்குச் சந்தை

சந்தை மதிப்பு : 1766

ஆண்டு :431

வர்த்தகமாகும் பங்குகள் 3769

/

மிகப் பழமையான சந்தை

பிராங்பர்ட் சந்தை

11-ம் நூற்றாண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. 1582-ம் ஆண்டு கரன்சி மதிப்பை தீர்மானிப்பதென முதலீட்டாளர்கள் முடிவு செய்தனர். அப்போதிலிருந்து பங்கு வர்த்தகமும் முறைப்படுத்தப்பட்டது.

அதிக பங்குகள் பட்டியல்

பாம்பே பங்குச் சந்தையில் சுமார் 5000 பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 3000த்துக்கும் மேற்பட்ட பங்குகள் தினசரி வர்த்தகத்தில் உள்ளன. பெருவாரியான பங்குகள் ஸ்மால் கேப் பட்டியலில் உள்ளன. ஆசியாவின் முதல் பங்குச் சந்தையாகவும் பிஎஸ்இ விளங்குகிறது.

அதிக சந்தை மதிப்பு

உலகின் அனைத்து பங்குச் சந்தைகளின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 86 சதவீதத்தினை முக்கிய 16 பங்குச் சந்தைகள் மட்டும் வைத்துள்ளன. இதில் சந்தை மதிப்பு கொண்ட சந்தை நியூயார்க் பங்குச் சந்தையாகும். மதிப்பு. 20 லட்சம் கோடி டாலருக்கும் அதிகம். 1792-ம் ஆண்டில் பங்குகளை விற்பதற்காக 24 புரோக்கர்கள் இணைந்து ஒப்பந்தம் செய்து கொண்டவர். 1812-ல் நியூயார்க் எக்சேஞ்ச் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச பெட்ரோலிய சந்தையையும் நிர்வகிக்கிறது.

சந்தை மதிப்பு

20 லட்சம் கோடி டாலர் - நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்

10 லட்சம் கோடி டாலர் - நாஸ்டாக், ஷாங்காய் , ஜப்பான் எக்ஸ்சேஞ்ச் குரூப்

5 லட்சம் கோடி டாலர் - லண்டன், யூரோநெஸ்ட், சென்ஷென், ஹாங்காங்

2 லட்சம் கோடி டாலர் - டிஎம் எஸ் குரூப், நாஸ்டாக் ஓஎம் எஸ், டாய்ச்சு போர்சே, சிக்ஸ் சுவிஸ், என்எஸ்இ, பிஎஸ்இ, கொரியா எக்ஸ்சேஞ், ஆஸ்திரேலியன் செக்யூரிட்டீஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x