Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM

மஜித் மஜிதியுடன் இணைந்தார் இசைப்புயல்!

படைப்பாளுமை மிகுந்த சர்வதேசத் திரைப்படங்களில் ஒன்று ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. 1997-ல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தைப் பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கியிருந்தார். ஒரு ஜோடி ஷுவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலகத்தையே கலங்க அடித்தவர்.

உலகப் பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் தரமான சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தப் படைப்புடன் உறவுகளின் உன்னதம் பேசும் பல திரைப்படங்களைக் கொடையாக அளித்தவர். அப்படிப்பட்ட இயக்குநரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்தால் எப்படியிருக்கும்? அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக மஜித் மஜிதி இயக்கி வரும் அந்த ஈரானியப் படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக அங்கேயே தங்கிவிட்டாராம் இசைப்புயல்.

இசையமைக்கும் படங்கள் எந்த மொழியில் உருவானாலும் எத்தனை பெரிய படவுலகாக இருந்தாலும் இடம்பொருள் ஏவல் என்ற பாரபட்சம் காட்டாமல் முழு அர்ப்பணிப்பைச் செலுத்திவிடும் கலைநேர்மை கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மஜித் மஜிதி படத்துக்கு இசையமைத்துவிட்டுத் திரும்பியதிலிருந்தே மிகவும் ஆத்ம திருப்தியோடு காணப்படுகிறாராம் அவர்.

அது மட்டுமல்ல, அந்தப் படத்தின் வெளியீட்டையும் மிக மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x