தலித் - பழங்குடி மாணவர்களுக்கு: முனைவர் படிப்புக்கு உதவித்தொகை

தலித் - பழங்குடி மாணவர்களுக்கு: முனைவர் படிப்புக்கு உதவித்தொகை
Updated on
1 min read

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் ஆதிதிராவிடர்கள், பழங்குடி மாணவர்கள், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் ஆகியோருக்குத் தமிழக அரசு தனியாகக் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான மத்திய அரசின் +2 படிப்புக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்குப் பராமரிப்புப் படி மட்டும் வழங்கப்படுகிறது. அதைப் பெறும் மாணவர்களுக்கும் அவர்கள் முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் நான்கு ஆண்டுகளுக்கும் வருடத்துக்கு 50 ஆயிரம் வீதம் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் 9.5.2013 அன்று அறிவித்தார். 2013-14 கல்வியாண்டு முதல் 700 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக வெளியாகி உள்ள தமிழக அரசின் இந்த அரசாணை 71 (தேதி- 07.10.2013) ஐ நீங்கள் தமிழக அரசின் இணையதளத்தின் தமிழ் வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in