Published : 18 Jan 2018 05:14 PM
Last Updated : 18 Jan 2018 05:14 PM

2017 சென்னை ரியல் எஸ்டேட்டின் முக்கிய போக்குகள்

இயற்கை சீற்றம், ஸ்திரமற்ற அரசியல் நிலை மற்றும் பணமதிப்பு நீக்கம் என பல காரணிகளால் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சென்னை ரியல் எஸ்டேட் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போதுதன மெதுவாக அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறது. முடிந்த 2017 வருடத்தை திரும்பிப் பார்க்கும்போது, சென்னை ரியல் எஸ்டேடில் இருந்த முக்கியமான 9 போக்குகள் என்னவென்பதை தெரிந்து கொள்ளலாம்

1.சந்தையில் மீண்டும் 'வாங்குபவர்கள்'

கருப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளால் ரியல் எஸ்டேட் சந்தை வீடு, மனை வாங்குபவர்களுக்கு சொர்க்கபுரியானது. சென்னையும் அதில் விதிவிலக்கல்ல. பெரும்பாலான சந்தை நோக்கர்கள் முதலீட்டுக்கான மற்ற வழிமுறைகளை பார்த்துக் கொண்டிருக்கையில், மீதமிருப்பவர்களுக்கு 2017-18 பட்ஜெட்டில் வந்த இரண்டாவது வீடு பற்றிய அறிவிப்பு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.

வருமானவரி சட்டத்தின் 71வது பிரிவின் படி, இரண்டாவது வீடு வாங்குபவர்களுக்கான வரி விலக்கு ரூ. 2 லட்சம் வரை மட்டுமே என்று மாற்றியமைக்கப்பட்டது.

இதனால் நேர்மையாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு சென்னை ரியல் எஸ்ட்டேட் சந்தை சாதகமாக அமைந்தது. கடந்த ஆண்டும் முதல் 3 காலாண்டுகளிலும், 79 சதவிதம் பேர், முதலீடாக மட்டுமல்லாமல் தங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வீடு வாங்கியுள்ளார்கள்.

 

2.புறநகர் மற்றும் சிறு சந்தைகளில் அதிக கவனம்

நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வீட்டு விலை மற்றும் காலி இடங்கள் குறைந்து வருவதால், 2017ன் 3வது காலாண்டில் புறநகர் மற்றும் சிறிய சந்தைகளில் வீடு வாங்குபவர்களின் கவனம் சென்றுள்ளது.

முக்கியமாக, இதில் பெரும்பாலான சிறு சந்தைகள் ஐடி நிறுவனங்களுக்கு அருகிலோ, அல்லது சிறப்பான போக்குவரத்து வசதி கொண்டதாகவோ இருக்கிறது. ரூஃப் அண்ட் ஃப்ளோர் ஆய்வை பொருத்தமட்டில், மேடவாக்கம், ஆவடி, தாம்பரம், போரூர், பெரும்பாக்கம் ஆகிய இடங்கள் 2017 3வது காலாண்டில் பெரும்பாலனவர்கள்  தேர்ந்தெடுத்த பகுதிகளாக இருக்கின்றன. 

 

3.அதிகம் விரும்பப்படும் பகுதி - தென் சென்னை

ஐடி நிறுவனங்கள் இருப்பதால் தென் சென்னை பகுதியில் வீடு தேடுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள். அடுத்த சுவாரசியம், தென் சென்னையில் தான் 3ஆம் காலண்டில் கட்டுப்படியாகும் விலையில் வீடும் கிடைத்து வந்துள்ளது. அடுத்த இடத்தில் மேற்கு சென்னை உள்ளது.

சிங்கபெருமாள் கோயில், சோலிங்கநல்லூர், மேடவாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும். எங்கள் ஆய்வின் படி 3ஆம் காலாண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களில் 29 சதவித திட்டங்கள் கட்டுப்படியாகும் விலையில் விற்கப்பட்டுள்ளது.

ஒரு சதுர அடியின் விலை ரூ. 2,200 முதல் ரூ. 3,400 வரை இருந்திருக்கிறது.

 

4.நகர உள்கட்டமைப்பு

மெட்ரோ ரயில் திட்டம், மதுரவாயல் துறைமுக சாலை திட்டம்  ஆகிய உள்கட்டமைப்பு திட்டங்கள் விருகம்பாக்கம், பெரும்பாக்கம், தி நகர், பெரம்பூர், மேடவாக்கம் உள்ளிட்ட சந்தைகளுக்கான ஈர்ப்பை அதிகரித்துள்ளது.

பொன்னேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம், சென்னை பெங்களூரு தொழில் நடைபாதை ஆகிய திட்டங்கள் சென்னை ரியல் எஸ்டேட் சந்தையை இன்னும் ஊக்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

5.தயாரான வீடுகள்

புதிய ரியல் எஸ்டேட் மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், கட்டி முடிக்கப்பட்டு வாழத் தயாரான வீடுகளுக்கான தேவை 2017ல் அதிகரித்தது. இதற்குக் காரணம், மசோதாவின் கீழ் அங்கீகாரம் பெற்ற கட்டுமானங்கள் குறைவு என்பதே.
 

roof and floor logo

6.அபார்ட்மெண்ட் - அதிகம் விரும்பப்படும் வீடு அமைப்பு

தேவை, வழங்கல் என இரண்டு விதத்திலும் அபார்ட்மெண்டுக்கான மவுசே அதிகமாக உள்ளது. 49 சதவித வீடு வாங்குபவர்கள் அபார்ட்மெண்ட் வீட்டையே தேர்ந்தெடுத்துள்ளார்கள். தொடர்ந்து மனைகள், வில்லா மற்றும் பிற சொத்துகள் பட்டியலில் உள்ளன. முதலீட்டின் மீதான வருவாய் அதிகமென்பதால் 28 சதவித சொத்து வாங்குபவர்கள், நிலம் மற்றும் காலிமனையில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

 

7.வீடு வாங்கும் பெண்கள் அதிகரிப்பு

ரூஃப் அண்ட் ஃப்ளோரின் ஆய்வை நன்றாகப் பார்த்தால், வீடு வாங்க நினைப்பவர்களில் சென்னையில் ஆண் பெண் விகிதம் கலந்தே இருக்கிறது. அதிகம் ஆண்களே வாங்க முற்பட்டாலும் ஆர்வம் காட்டும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். இதில் பெரும்பாலனவர்கள் ஐடி துறையை சேர்ந்தவர்கள். சுய தொழில் செய்யும் பெண்களும் இந்தப் பட்டியலில் அடக்கம்.

 

8.கட்டுப்படியாகும் விலை

கட்டுப்படியாகும் விலையில் இருக்கும் சொத்துகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. எங்கள் ஆய்வின் படி, முதல் காலாண்டிலிருந்து மூன்றாம் காலாண்டு வரை தொடங்கப்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களில் 45 சதவிதம் 40லிருந்து 80 லட்ச ரூபாய் மதிப்புடையது. 29 சதவிதம் 40 லட்சத்துக்குள் கட்டுப்படியாகும் விலையில் இருந்துள்ளது. 26 சதவிதம் அதிக விலையான 80 லட்சம் முதல் 1.5 கோடி மதிப்பில் இருந்துள்ளது.

 

9.அதிகம் விரும்பப்படும் 2 படுக்கை அறை குடியிருப்புகள்

சென்னையில்  வீடு வாங்குவதில் தகவல் தொழில்நுட்ப துறையினர்  மற்றும் ஆட்டோமொபைல் துறையினரின்   பெரும்பாலான சாய்ஸ் ஆக இருப்பது 2 படுக்கை அறை குடியிருப்புகள்.  3 படுக்கை  அறை குடியிருப்புகளை விட சமீபத்தில்  4  மற்றும் 5 படுக்கை அறை குடியிருப்புகளுக்கான தேவைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x