Published : 19 Dec 2017 10:41 AM
Last Updated : 19 Dec 2017 10:41 AM

வரலாறு தந்த வார்த்தை 14: ‘முடி’ ஆட்சி!

ன்னதான் ‘தலை’ போற விஷயமா இருந்தாலும் முதல்ல இதைப் படிச்சிடுங்க. கடைசியில, காங்கிரஸின் ‘தல’ ஆகிவிட்டார் ராகுல் காந்தி என்பதுதான் தற்போதைய தலைப்புச் செய்தி.

கட்சியில் அவரைவிட வயதிலும் அனுபவத்திலும், செல்வாக்கிலும் மூத்த, பெரிய ‘தலை’வர்கள் இருந்தபோதும், ராகுலுக்குத் தலைவர் பதவி கொடுத்ததை ‘இனிக் கட்சிக்குப் புது ரத்தம் பாயும்’ என்று சந்தோஷமாகவும் ‘இனிக் கட்சி என்ன ஆகப்போகுதோ’ என்று சந்தேகமாகவும் பார்க்கப்படுகிறது.

சரி எதற்காக இந்த ‘வாரிசு’ அரசியல்? காரணம் உண்டு.

அனுபவம், பணம், அதிகாரம், மக்களிடம் உள்ள செல்வாக்கு போன்றவற்றில் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களை ஆங்கிலத்தில் ‘Bigwig’ என்று குறிப்பிடுவார்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவில் ‘விக்’ அணியும் வழக்கம் இருந்தது. தலையில் முடி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி பலரும் விக் அணிவதை ஒரு ஃபேஷனாக வைத்திருந்தார்கள். ஒருவர் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருக்கிறாரோ அதற்கேற்ப தலையில் அணியும் விக்கின் நீளமும் மாறும். பிரான்ஸ் தேசத்தின் லூயி 14-ம் மன்னனிடமிருந்து இந்த விக் அணியும் வழக்கம் தோன்றியது. அதைப் பார்த்து மொத்த ஐரோப்பாவும் பின்பற்றியது.

மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழிதானே? மக்களும் இவ்வாறு விக் அணிய ஆரம்பிக்க, நாட்டில் பெரிய ‘தலை’கள் எல்லாம் தங்களுக்கான முக்கியத்துவம் குறைவதாக நினைக்கத் தொடங்கினார்கள். உடனே வந்தது ஒரு சட்டம். அரசர்கள், நீதிபதிகள், மதக் குருமார்கள் போன்றோர் மட்டுமே விக் அணியலாம், மற்றவர்கள் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல நாடுகளில் அரசர்கள் பலர் விக் அணிந்து ‘முடி’ ஆட்சி செய்தனர். அதிலிருந்துதான் மேற்கண்ட அந்தச் சொல்லும் கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x