Published : 18 Dec 2017 10:00 AM
Last Updated : 18 Dec 2017 10:00 AM

டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் விரைவில் அறிமுகம்

டு

காட்டி நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான ஸ்கிராம்ப்ளர் மோட்டார் சைக்கிள் விரைவில் இந்தியச் சாலைகளில் அறிமுகமாகிறது. டுகாட்டி நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் மேக் 2 என்ற பெயரிலான இந்த மோட்டார் சைக்கிளின் விலை ₹8.52 லட்சமாகும்.

இத்தாலியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனமான டுகாட்டி மோட்டார் ஹோல்டிங்ஸ் எஸ்பிஏ, போலங்னா எனும் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

டுகாட்டி நிறுவனம் 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இந்நிறுவனம் அமெரிக்க சந்தையை மட்டுமே கருத்தில் கொண்டு ஸ்கிராம்ப்ளர் மாடல் மோட்டார் சைக்கிளை 1962-களில் அறிமுகம் செய்தது. இதற்கு சிறந்த வரவேற்பு கிடைக்கவே அடுத்தடுத்து மேம்பட்ட ரகங்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இத்தகைய ஸ்கிராம்ப்ளர் மாடல் மோட்டார் சைக்கிளை பிற நாடுகளிலும் அறிமுகம் செய்தது. தற்போது இந்தியாவிலும் மேம்படுத்தப்பட்ட ஸ்கிராம்ப்ளர் 2.0 மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மாடலின் மிக முக்கியமான அம்சமே இதில் கலிபோர்னிய வடிவமைப்பாளர் ரோலண்ட் சாண்ட் அடித்த வண்ணப்பூச்சுதான். இது 1970-ம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக அனைவரையும் கவர்ந்து இழுத்த வண்ணப்பூச்சாகும்.

மிகவும் மெல்லிதான அலுமினியம் ஹாண்டில் பாருடன், தட்டையான டிராக் புரோ சீட்டுடன் கறுப்பு நிற சைலன்ஸரைக் கொண்டதாக இது வெளிவந்துள்ளது.

803 சிசி திறன் கொண்டதாக இரட்டை சிலிண்டர் டெஸ்மோடியூ இன்ஜினுடன் இது வெளிவருகிறது. 6 கியர்களை கொண்டதாக ஏபிடிசி (ஆட்லர் பவர் டார்க் பிளேட் கிளட்ச்) உள்ளதாக இது வெளிவருகிறது. இது கியர் மாற்றத்தை எளிதாக்க உதவுகிறது.

18 அங்குல அலாய் சக்கரம், பைரெலி எம்டி டியூயல் டயர் கொண்டதாக, தேவைக்கேற்ப அட்ஜெட்ஸ்ட் செய்யும் வகையிலான பின்புற சஸ்பென்ஷன் உள்ளது. முன்புறம் 330 மி.மீ மற்றும் பின்புறம் 245மி.மீ டிஸ்க் பிரேக்குடன் ஆன்டிலாக் பிரேகிங் சிஸ்டத்துடன் இது வெளி வந்துள்ளது.

இளைஞர்களை ஈர்க்கும் வாகனமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x