Published : 27 Nov 2017 11:04 AM
Last Updated : 27 Nov 2017 11:04 AM

ஜீப் கம்பாஸில் ஏர் பேக் பிரச்சினை!

ந்திய சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வாகனங்களில் ஃபியட் நிறுவனத்தின் புதிய வரவான ஜீப் கம்பாஸ் காரும் ஒன்றாகும். எப்போது முன்பதிவு தொடங்கும் என காத்திருந்து, எப்போது டெலிவரி செய்யப்படும் என ஆவலாக இருந்தவர்கள் ஏராளம்.

தமிழகத்திலும் ஜீப் கம்பாஸுக்கு சொந்தக்காரராக பெருமையோடு வலம் வருவோர் சிலர். ஆனால் இத்தகைய வரவேற்பு பெற்ற ஜீப் கம்பாஸிலும் உயிர் காக்கும் ஏர் பேக் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் 1,200 கார்களை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

முன்புற ஏர் பேக்கில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடித்து அதற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து வாகனங்களை திரும்பப் பெறும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (எப்சிஏ) நிறுவனம்.

செப்டம்பர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை தயாரான வாகனங்களில் இத்தகைய பழுது ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்புற ஏர்பேக் தயாரிப்பில் பிரச்சினை இருப்பதாக அதன் சப்ளைதாரர் நிறுவனத்துக்கு தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.

ஒருவேளை இத்தகைய ஏர்பேக் உள்ள கார் விபத்துக்குள்ளாகியிருந்தால் நிச்சயம் முன்னிருக்கை பயணிக்கு பெருத்த காயம் ஏற்பட்டிருக்கும். நல்லவேளையாக இதுவரை எதுவும் விபத்தில் சிக்கவில்லை. வாகனங்களை திரும்பப்பெற்று இலவசமாகவே வேறு புதிய ஏர்பேக் பொறுத்தித் தரும் பணியைத் தொடங்கியுள்ளதாக ஃபியட் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது சகஜம். ஆனால் உயிர்காக்கும் விஷயத்தில் கவனக்குறைவு நிறுவனத்தின் பெயரைக் கெடுத்துவிடும். இதை ஃபியட் உணர்ந்திருக்கும் என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x