

யூடியூபர் டிடிஎஃப் வாசன் நடிக்கும் ’மஞ்சள் வீரன்’ திரைப்படத்தின் ’ஃபர்ஸ்ட் லுக்’ சமீபத்தில் வெளியானது. சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் சென்ற நடிகர்களைப் பார்த்திருப்போம். இது சமூக வலைதளக் காலம் அல்லவா? யூடியூப், இன்ஸ்டகிராம் பிரபலங்கள்கூடப் பெரியத் திரையில் அடியெடுத்து வைக்கிறார்கள். இந்தப் பட்டியலில் டிடிஎஃப் வாசன் இணைந்திருக்கிறார். அவருடைய பிறந்த நாளன்று, ’மணிக்கு 299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்’ என்கிற அறிவிப்போடு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. விடுவார்களா நெட்டிசன்கள்?
டிடிஎப் வாசனை கலாய்த்து வருகின்றனர். ’இனி தமிழ் சினிமாவைப் காப்பாற்றப் போவது டிடிஎஃப் வாசன்தான்’ என மீம்கள் வட்டமடிக்கத் தொடங்கிவிட்டன. ’299 கி.மீ. வேகத்தில் எப்படிப்பா சூட்டிங் நடத்துவீங்க’ என சமூக வலைதளத்தில் கலாய்க்கவும் செய்கிறார்கள். அதிவேகமாக பைக்கை இயக்கி, சர்ச்சை வண்டியில் வான்டடாக ஏறுவது டிடிஎஃப் வாசனின் வழக்கம். இனி சினிமா பக்கமும் அவர் வந்துவிட்டதால் கலாய்ப்பு மீம்ஸ்களை நெட்டிசன்கள் உலவவிடவும் தொடங்கிவிட்டார்கள். இனியாவது ’விவேக’மாக இருந்தால் சரி!