Published : 31 Oct 2017 11:10 AM
Last Updated : 31 Oct 2017 11:10 AM

வரலாறு தந்த வார்த்தை 07: மழை... நல்லாருக்கியா மழை?

செ

ன்னையில் இது மழைக்காலம்! நவம்பர் வந்தாலே பருவநிலை நம்மை நடுங்கச் செய்கிறது. அது மழையில் நனைவதால் ஏற்படும் குளிர் நடுக்கம் அல்ல. எங்கே மழை நம்மை வெள்ளத்தில் தத்தளிக்கச் செய்துவிடுமோ என்ற நடுக்கம்!

2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தைப் போல இந்த ஆண்டு எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க, தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

இப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் அல்லது அசம்பாவிதம் ஏற்படுத்தும்படி நடந்துகொள்கிற நபர்கள் ஆகியோரை, நமது தொடர்பு எல்லையிலிருந்து விலக்கி வைப்பதை ஆங்கிலத்தில் ‘Keeping someone / something at bay’, என்று சொல்வார்கள். இந்தச் சொற்றொடர், லவங்கப்பட்டை மரத்திலிருந்து பிறந்தது.

பழங்காலத்தில், லவங்கப்பட்டை மரம், நம்ம ஊர் ‘கற்பக விருட்சம்’ போன்று மிகவும் சக்தி படைத்த மரமாகக் கருதப்பட்டது. மழை நாட்களில் அந்த மரத்தின் கீழ் நின்றால், இடி, மின்னலிலிருந்து தப்பிக்கலாம் என்று ரோமானியர்களும் கிரேக்கர்களும் நம்பினர். அந்நாடுகளின் வீரர்கள், போர்க் காலத்தில் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள லவங்க இலைகளை உடுத்திக் கொண்டதாக வரலாறு சொல்கிறது.

1665-ம் ஆண்டில் லண்டன் மாநகரத்தில், பிளேக் நோய் ஏற்பட்டு மக்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்தபோது, அந்த நோயிலிருந்து தப்பிக்க, சிலர் லவங்க இலைகளை அணிந்துகொண்டார்களாம். இப்படி ஒரு வரலாற்று தன்மையைக் கொண்ட லவங்க இலை, இன்று நம் வீடுகளின் ‘பிரியாணி’யில் ‘வாசம்’ செய்கிறது!

மழைக்கால சென்னையில் ஏற்பட வாய்ப்புள்ள வெள்ளத்தை ‘keep at bay’-யில் வைக்கத் தமிழக அரசு முயற்சிக்கிறது என்று சொல்வது சரிதான். ஆனால், அந்த முயற்சி வெள்ளத்தால் நம் நகரம், ‘பே (Bay) ஆஃப் பெங்கால்’ ஆக மாறுவதைத் தடுக்குமா என்பதே இப்போதைய என் கேள்வி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x