Published : 23 Oct 2017 11:25 AM
Last Updated : 23 Oct 2017 11:25 AM

சூரிய ஆற்றல் கார்

சூ

ழல் பாதிப்பில்லாத பேட்டரியில் ஓடும் கார்கள், வாகனங்கள் தயாரிப்பில் ஆட்டோமொபைல் துறை தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது அடுத்தகட்டமாக செலவில்லாமல், இயற்கை ஆற்றலை (சூரிய ஒளி) பயன்படுத்தி கார்களை இயக்கும் நுட்பம் பிரபலமாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் சமீபத்தில் சூரிய மின்னாற்றலில் இயங்கும் கார்களுக்கான போட்டி நடைபெற்றது. மொத்தம் 41 கார்கள் இதில் பங்கேற்றன. மொத்த பந்தய தூரம் 3 ஆயிரம் கிலோ மீட்டராகும்.

இந்தப் போட்டியில் நெதர்லாந்தைச் சேர்ந்த நுனா 9 எனும் கார் முதல் பரிசைப் பெற்றது. இந்தக் கார் சராசரியாக பணிக்கு 81 கி.மீ.வேகத்தில் பயணித்து இலக்கை எட்டியுள்ளது.

ஒருவர் பயணிக்கும் வகையிலான ஏரோ டைனமிக் வடிவிலான இந்தக் கார் வேகமாகவும், ஒரே சீரான வேகத்தோடும் ஓடி முதல் பரிசை வென்றுள்ளது.

மற்றொரு நெதர்லாந்து அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இக்குழு வடிவமைத்த கார் மிகச் சிறந்த வடிவமைப்பு, அதில் பயன்படுத்தப்பட்டிருந்த பொருள்கள் உள்ளிட்டவற்றுக்காக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.

குடும்பத்தினர் பயணிக்கும் வகையிலான ஸ்டெல்லா வைய் எனும் காரில் 5 பேர் பயணிக்க முடியும். இது மணிக்கு 69 கி.மீ வேகத்தில் சென்றது.

இந்த போட்டியில் பங்கேற்ற குழுவினர் வர்த்தக ரீதியில் இத்தகைய கார்களை தயாரிப்பதற்கான முன்னோட்டமாக தங்கள் தயாரிப்புகளின் திறனை ஆட்டோமொபைல் துறையினருக்கு பறை சாற்றினர்.

பேட்டரி ஸ்போர்ட்ஸ் கார்களில் டெஸ்லா நிறுவனத்தின் கார்கள்தான் மிகவும் பிரசித்தம். அதைப் போல சூரிய ஆற்றலில் அதிக வேகமாக செல்லக் கூடிய ஸ்போர்ட்ஸ் ரகக் கார்களும் இப்போட்டியில் இடம்பெற்றன.

வழக்கமாக கார்களை வீட்டிலுள்ள கேரேஜில் வைத்து பூட்டி பாதுகாக்க வேண்டும். ஆனால் சூரிய ஆற்றல் கார்களை வெட்ட வெளியில் நிறுத்தலாம். சூரிய ஒளி படப் பட இதன் மேலுள்ள சூரிய தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தியாகி இதிலுள்ள பேட்டரியில் சார்ஜ் ஆகும்.

இந்தப் போட்டியில் பங்கேற்ற கார்கள் அனைத்துமே பல்கலைக் கழகங்களால் உருவாக்கப்பட்டவையாகும். இந்தியா போன்ற நாடுகளுக்கு செலவு குறைந்த சூரிய ஆற்றல் கார்கள் நிச்சயம் வரப்பிரசாதம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x