வேலை வேண்டுமா?- சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்கள்

வேலை வேண்டுமா?- சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்கள்
Updated on
1 min read

சுகாதாரத்துறையில் காலியாகவுள்ள குழந்தைகள் சுகாதாரத்துறை அதிகாரி உள்ளிட்ட 89 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு அல்லது பி.எஸ்சி பப்ளிக் ஹெல்த் நர்ஸ் பட்டப் படிப்பை முடித்திருக்கவேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். மேலும், இடஒதுக்கீட்டின் கீழ் சாதிப் பிரிவினருக்கு உரிய வயதுச் சலுகைகள் இந்தப் பணியிடங்களுக்கும் உண்டு. முதலில் எழுத்துத் தேர்வை எழுதவேண்டும்.

இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ.175-ஐ செலுத்தவேண்டும். ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகஸ்ட் 20-ம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in