Published : 04 Jun 2019 09:23 AM
Last Updated : 04 Jun 2019 09:23 AM

வேலை வேண்டுமா? - இ.பி.எப். அலுவலகப் பணி ரூ.50 ஆயிரம் சம்பளம்

மத்திய அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) உதவியாளர் பதவியில் 280 காலியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தகுதி

இப்பதவிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 20 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பு தளர்த்தப்படும்.

தேர்வுமுறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு இரு நிலைகள் உண்டு. இரண்டுமே ஆன்லைன்வழித் தேர்வுகள். முதல்நிலைத் தேர்வில் பொது ஆங்கிலம், ரீசனிங், அடிப்படை கணிதம் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும்.

மொத்த மதிப்பெண் 100. ஒரு மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். இதில் தேர்ச்சி பெறுவோர் ‘ஒரு காலியிடத்துக்கு 10 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

முதன்மைத் தேர்வில் ரீசனிங், நுண்ணறிவுத் திறன், பொருளாதாரம், நிதி, பொது ஆங்கிலம், கணிதத் திறன் ஆகிய 4 பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் 150 கேள்விகள் இடம்பெறும். மொத்த

மதிப்பெண் 200. 2 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். அதோடு ஆங்கிலத்தில் விரிவாகப் பதில் அளிக்கும் வகையில் (கடிதம், கட்டுரை) ஒரு தேர்வும் உண்டு. இதில் 3 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 30. கேள்விகளுக்கு 45 நிமிடத்தில் ஆன்லைனில் பதில் அளிக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வு, விரிவாக விடையளிக்கும் தேர்வு ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. முதன்மைத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.

உதவியாளர் பதவிக்கு ஆரம்ப நிலையில் தோராயமாக ரூ.50 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.உரிய கல்வித்தகுதியும் வயது வரம்பும் உடைய பட்டதாரிகள் இ.பி.எப். இணையதளத்தைப் (www.epfindia.gov.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

முக்கியத் தேதி

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25 ஜூன் 2019

முதல்நிலைத் தேர்வு:

30, 31 ஜூலை 2019

ஹால் டிக்கெட்: 20 ஜூலை முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x