மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பகங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பகங்கள்
Updated on
1 min read

தமிழகத்தில் இந்த ஆண்டில் 1 லட்சத்து 5,829 மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 81ஆயிரத்து 586 பேர் உறுப்பு நலம் குன்றியவர்கள். 12 ஆயிரத்து 539 பேர் பார்வைத்திறன் இழந்தவர்கள். 11 ஆயிரத்து 704 பேர் செவித்திறன் குறைந்தவர்கள்.

இவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகச் சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம் ஒன்று சென்னையில், கிண்டியில் செயல்பட்டு வருகின்றது.

அந்த வேலைவாய்ப்பகத்தின் கிளைகள் தமிழகத்தின் மாவட்டங்களான கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர், மதுரை, நாகர்கோவில், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், உதகமண்டலம், திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய 13 இடங்களில் செயல்படுகின்றன.

இவை மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்தம் செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்விற்காக முயற்சிகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை செய்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in