பழங்குடி இளைஞர்களுக்கு வழிகாட்டும் மையம்

பழங்குடி இளைஞர்களுக்கு வழிகாட்டும் மையம்
Updated on
1 min read

பழங்குடி இளைஞர்களுக்கு சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஒன்று உதகமண்டலத்தில் இயங்கி வருகின்றது. இம்மையம் பழங்குடியின மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு வழிகாட்டும் விதமாக தகவல் கையேடுகள் வெளியிடுகிறது. தொழில்கள் மற்றும் பயிற்சிகள் பற்றிய தகவல்களை சேகரித்து, தொகுத்து பழங்குடியின மக்களுக்கு வழங்கி வருகிறது.

தொழில்நெறி வழிகாட்டும் அலுவலர் பழங்குடியினருக்கான பள்ளிகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சென்று பழங்குடியின மாணவர்களுக்கு தொழில்நெறி சொற்பொழிவுகள் வழங்குகிறார். பெருவாரியான அளவில் பழங்குடியின மாணவர்கள் பயிலும் பள்ளிகள் மற்றும் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு சென்று உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டும் சொற்பொழிவுகள், தொழிற்கல்விகள், பயிற்சி வகுப்புகள், கல்வி உதவித் தொகை மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களையும் அளிக்கிறார்.

நெடுந்தொலைவில் வசிக்கும் பழங்குடியினரின் இடத்திற்கே சென்று அவ்விடத்திலேயே பதிவுகளை மேற்கொள்கிறார். 2013-14ம் நிதியாண்டில் நெடுந்தொலைவில் வசிக்கும் 85 பழங்குடியின மனுதாரர்கள் பதிவு செய்யப்பட்டனர். 131 பழங்குடியின மனுதாரர்கள் வழிகாட்டப்பட்டனர். 188 மனுதாரர்களுக்கு தனிநபர் தகவல்கள் வழங்கப்பட்டன. 35 தொழில்நெறி சொற்பொழிவுகள் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலரால் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in