மகளிர் பிரீமியர் லீக் ஜனவரி 9-ல் தொடக்​கம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்​கெட் தொடர் வரு​கிற ஜனவரி 9-ம் தேதி முதல் பிப்​ர​வரி 5 வரை நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்​கெட் தொடர் வழக்​க​மாக பிப்​ர​வரி - மார்ச் மாதங்​களில் நடை​பெறும். ஆனால், ஐசிசி ஆடவர் டி20 கிரிக்​கெட் உலகக் கோப்​பைத் தொடர் பிப்​ர​வரி 7-ம் தேதி தொடங்க ​உள்​ள​தால், மகளிர் பிரீமியர் லீக் கிரிக்​கெட் தொடர் இந்த முறை முன்​கூட்​டியே நடத்​தப்​படு​கிறது.

மகளிர் பிரிமீயர் லீக் 3 சீசன்​களைக் கடந்​துள்ள நிலை​யில், அடுத்த ஆண்டு நடை​பெறும் 4-வது சீசன் 2026-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தொடங்கி பிப்​ர​வரி 5-ம் தேதி வரை நடை​பெறுகிறது. போட்​டிகள் நவி மும்பை மற்​றும் வதோத​ரா​வில் நடத்தப்படவுள்ளன.

இது தொடர்​பாக மகளிர் பிரீமியர் லீக் தலை​வர் ஜெயேஷ் ஜியார்ஜ் கூறும்​போது, “மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அடுத்த சீசன் நவி மும்பை மற்​றும் வதோத​ரா​வில் நடத்​தப்​படும். தொடரின் பாதிப் போட்​டிகள் டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடத்தப்​படும். அதன் பின்​னர் மீத​முள்ள போட்​டிகள் வதோத​ரா​வில் நடத்​தப்​படும். இறுதிப் போட்டியும் வதோதராவில் நடைபெறும்” என்றார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
WPL Auction: 67 வீராங்கனைகளை ஒப்பந்தம் செய்த 5 அணிகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in