30 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஜூனியர் தேசிய ஹாக்கி போட்டி

30 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஜூனியர் தேசிய ஹாக்கி போட்டி
Updated on
1 min read

புதுடெல்லி: மகளிருக்​கான 16-வது ஜூனியர் தேசிய சாம்​பியன்​ஷிப் ஹாக்கி போட்டி புனே​வில் இன்று தொடங்​கு​கிறது. வரும் 23-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் 30 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. ‘ஏ’, ‘பி’, ‘சி’ என 3 டிவிஷன்​களாக போட்​டிகள் நடை​பெற உள்​ளன.

சாம்​பியன் பட்டத்​துக்​கான ‘ஏ’ டிவிஷனில் 12 அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ‘ஏ’ பிரி​வில் ஜார்க்​கண்ட், பஞ்​சாப், சண்​டிகர் அணி​களும் ‘பி’ பிரி​வில் ஹரி​யாணா, ஒடி​சா, பெங்​கால் அணி​களும் இடம் பெற்​றுள்​ளன.

‘சி’ பிரி​வில் உத்​தரப்​பிரதேசம், மகா​ராஷ்டி​ரா, மணிப்​பூர் அணி​களும் ‘டி’ பிரி​வில் சத்​தீஸ்கர், மத்​தியபிரதேசம், இமாச்​சலப்பிரதேசம் அணி​களும் உள்​ளன. ‘ஏ’ டிவிஷன் போட்​டிகள் வரும் 16-ம் தேதி முதல் நடை​பெறுகின்றன.

லீக் சுற்​றின் முடி​வில் ஒவ்​வொரு பிரி​விலும் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறும். கால் இறுதி சுற்று ஆடடங்​கள் 20-ம் தேதி​யும், அரை இறுதி ஆட்​டங்​கள் 21-ம் தேதி​யும் நடை​பெறுகின்​றன.

இறு​திப் போட்டி 23-ம் தேதி நடை​பெறுகிறது. ‘ஏ’ டிவிஷனில் 11 மற்​றும் 12-வது இடத்தை பிடிக்​கும் அணி​கள் அடுத்த ஆண்​டுக்​கான போட்​டி​யில் ‘பி’ டிவிஷனுக்கு தகுதி இறக்​கம் செய்​யப்​படும்.

‘பி’ டிவிஷனில் 10 அணி​கள் உள்​ளன. இவை 2 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ‘ஏ’ பிரி​வில் ஆந்​தி​ரா, அசாம், டெல்​லி, கேரளா, மிசோரம் அணி​களும் ‘பி’ பிரி​வில் கர்​நாட​கா, உத்​த​ராகண்ட், தமிழ்​நாடு, பிஹார், கோவா அணி​களும் இடம் பெற்​றுள்​ளன.

இதில் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் ‘ஏ’ டிவிஷனுக்கு தரம் உயர்த்​தப்​படும். அதேவேளை​யில் கடைசி 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் ‘சி’ டிவிஷனுக்கு தகுதி இறக்​கம் செய்​யப்​படும்.

‘சி’ டிவிஷனில் இடம் பெற்​றுள்ள 8 அணி​கள் இரு பிரி​வாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ‘ஏ’ பிரி​வில் அருணாச்​சலப்பிரதேசம், தாத்ரா & நாகர் ஹவேலி மற்​றும் டையூ டாமன், ராஜஸ்​தான், திரிபுரா அணி​களும், ‘பி’ பிரி​வில் புதுச்​சேரி, குஜ​ராத், ஜம்மு & காஷ்மீர், தெலங்​கானா ஆகிய அணி​களும் இடம் பெற்​றுள்​ளன. இதில் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள்​ ‘பி’ டிவிஷனுக்​கு முன்​னேறும்​.

30 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஜூனியர் தேசிய ஹாக்கி போட்டி
ஆக.20-ல் காங்கிரஸ் பொதுக்குழு: மாணிக்கம் தாகூர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in