​விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

​விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
Updated on
1 min read

லண்​டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இன்று லண்​டனில் கோலாகல​மாக தொடங்​க​வுள்​ளது. ஆண்​டின் 3-வது கிராண்ட்ஸ்லாம் போட்​டி​யான விம்​பிள்​டன் டென்னிஸ் போட்டிகள் லண்​டனில் நடை​பெறவுள்​ளன.

ஆடவர் பிரி​வில், நடப்​புச் சாம்​பிய​னான ஜன்​னிக் சின்​னர்​ (இத்தாலி), மகளிர் பிரி​வில் நடப்​புச் சாம்​பிய​னான இகா ஸ்வி​யாடெக் (போலந்​து) உள்​ளிட்​டோர் இந்​த​முறை​யும் களமிறங்​கு​கின்றனர். மேலும் போட்​டித் தரவரிசை​யில் மகளிர் பிரி​வில் அரினா சபலென்கா​வும்​(பெலாரஸ்), ஆடவர் பிரி​வில் ஜன்​னிக் சின்​னரும் முதல் நிலை​யில் உள்​ளனர். முன்​னணி வீரர், வீராங்​க​னை​கள் அனை​வரும் இப்​போட்​டி​யில் பங்​கேற்​க​வுள்​ளனர்.

இன்று நடை​பெறும் ஆடவர் பிரிவு முதல் சுற்று ஆட்​டத்​தில் டேனியல் மேத்​வ​தே​வும்​(ரஷ்​யா), மரின் சிலிச்​சும்​(குரோஷி​யா) மோதவுள்​ளனர். மேலும் முதல் சுற்​றில் ஜன்​னிக் சின்​னருடன், செர்பியா வீரர் மியோமிர் கெக்​மானோவிக்​கும் களம் காணவுள்ளார்.

மகளிர் பிரிவு முதல் சுற்​றில் அமெரிக்க வீராங்​கனை கோகோ காஃபும், ஜெர்​மனி வீராங்​கனை தமாரா கோர்​பாட்​ஸும் இன்று பலப்​பரீட்சை நடத்​தவுள்​ளனர். இந்த ஆண்டு விம்​பிள்​டன் பரிசுத்​தொகை ரூ.821 கோடி​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. சாம்​பியன் பட்டம் வெல்​லும் வீரர், வீராங்​க​னைக்​குத் தலா ரூ.46 கோடி பரிசாக வழங்​கப்​பட​வுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

​விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
​கானாவை வீழ்த்தி நாக்​-அவுட் சுற்றில் தடம்​ப​தித்த குரோஷியா | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in