மேற்கு இந்தியத் தீவுகள் 344 ரன் குவிப்பு: WI vs PAK 2-வது டெஸ்ட்

அரை சதம் விளாசிய மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ்

அரை சதம் விளாசிய மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ்

Updated on
1 min read

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியத் தீவுகள் அணிக்கு டேக்நரைன் சந்தர்பால், பிரண்டன் கிங் ஜோடி நிலையான தொடக்கம் கொடுத்தது.

டேக்நரைன் சந்தர்பால் 32 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங் 50 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் அலி உஸ்மான் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

இதைத் தொடர்ந்து கவேம் ஹாட்ஜ் 10, அமிர் ஜாங்கூ 26, ஷாய் ஹோப் 29 ரன்களில் நடையை கட்டினர். 173 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் ஜஸ்டின் கிரீவ்ஸுடன் இணைந்து கேப்டன் ராஸ்டன் சேஸ் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயற்சித்தார்.

ஜஸ்டின் கிரீவ்ஸ் 92 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது 2-வது அரை சதத்தை கடந்தார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 74 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.

ஜஸ்டின் கிரீவ்ஸ் 64, ராஸ்டன் சேஸ் 36 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 105.1-வது ஓவரில் 344 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

ஜஸ்டின் கிரீவ்ஸ் 73, ராஸ்டன் சேஸ் 70, கேமர் ரோச் 19, ஷமர் ஜோசப் 8, ஜெய்டன் சீல்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சஜித் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான் அணி. அப்துல்லா ஷபிக் 107, பாபர் அஸம் 86 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர்.

<div class="paragraphs"><p>அரை சதம் விளாசிய மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ்</p></div>
பாகிஸ்தான் பயிற்சியாளராகிறார் தென் ஆப்பிரிக்காவின் மைக் ஸ்மித்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in