பாகிஸ்தானை வீழ்த்தியது மே.இ.தீவுகள்

பாகிஸ்தானை வீழ்த்தியது மே.இ.தீவுகள்
Updated on
1 min read

டிரினிடாட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிரினிடாட்டில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் 311 ரன்களும், பாகிஸ்தான் 282 ரன்களும் எடுத்தன. 29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷமர் ஜோசப் 38, டேக்நரைன் சந்தர்பால் 35 ரன்கள் சேர்த்தனர்.

211 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டத்தில் 40.2 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசம் 58, முகமது அப்பாஸ் 23, முகமது ரிஸ்வான் 11 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கை ரன்னை எட்டவில்லை. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். கேமர் ரோச், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 2-ம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் தொடங்குகிறது.

பாகிஸ்தானை வீழ்த்தியது மே.இ.தீவுகள்
CWG 2026: பாரா 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் இந்தியாவின் திலீப்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in