“வைபவ் சூர்யவன்ஷியை விரைந்து வெளியேற்ற முயற்சிப்போம்” - குஜராத் பயிற்சியாளர் பார்த்தீவ் படேல்

“வைபவ் சூர்யவன்ஷியை விரைந்து வெளியேற்ற முயற்சிப்போம்” - குஜராத் பயிற்சியாளர் பார்த்தீவ் படேல்
Updated on
1 min read

முலான்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை விரைந்து வெளியேற்ற முயற்சிப்போம் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்த ஆட்டம் நாளை (மே 29) நியூ சண்டிகரில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுகின்ற அணி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உடன் விளையாடும்.

புதன்கிழமை அன்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி. அவரது ஆட்டம் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவியது. இந்த இன்னிங்ஸில் அவர் பல்வேறு சாதனைகளை படைத்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த குஜராத் டைட்டன்ஸ் துணை பயிற்சியாளர் பார்த்தீவ் படேல் கூறியது:

“வைபவ் சூர்யவன்ஷி பேட் செய்யும் விதம் எனக்கு திருப்தி தருகிறது. அவர் அசாதாரண திறன் படைத்தவர். அவரது ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நான் எதிரணியை சேர்ந்தவர் என்ற முறையில் நாளைய தினம் அவரது வழக்கமான ஆட்ட பாணி இருக்காது என கருதுகிறேன்.

அவரை விரைந்து வெளியேற்ற முயற்சிப்போம். அது எங்களால் முடியும் என நம்புகிறேன். அனைத்து அணிகளும் எதிரணி வீரர்களுக்கு எதிராக திட்டமிடுவது வழக்கம். அந்த வகையில் நாங்களும் அவரது வீடியோக்களை பார்த்துள்ளோம். அந்த வகையில் எங்கள் திட்டத்தை நாங்கள் வகுப்போம். அது என்ன, எப்படி என்பதை களத்தில் சொல்வோம்” என தெரிவித்தார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்ஸில் 680 ரன்களை வைபவ் சூர்யவன்ஷி எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 45.33, ஸ்ட்ரைக் ரேட் 242.85. மொத்தம் 65 சிக்ஸர்களை இந்த சீசனில் விளாசி உள்ளார். 1 சதம் மற்றும் 4 அரைசதத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

“வைபவ் சூர்யவன்ஷியை விரைந்து வெளியேற்ற முயற்சிப்போம்” - குஜராத் பயிற்சியாளர் பார்த்தீவ் படேல்
நீட் கட்டணத்தை திரும்ப பெற ஜூன் 22 வரை அவகாசம் நீட்டிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in