“சிறப்​பான பந்​து​வீச்​சால் முதல் வெற்றியை பெற்றோம்” - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

“சிறப்​பான பந்​து​வீச்​சால் முதல் வெற்றியை பெற்றோம்” - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
Updated on
1 min read

சென்னை: சிறப்​பான பந்​து​வீச்​சால் டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்​கெ​தி​ரான லீக் ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றோம் என்று சென்னை சூப்​பர் கிங்​ஸ் ​(சிஎஸ்​கே) அணி​யின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரி​வித்​தார்.

சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி (சிஎஸ்​கே) 23 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் கூறிய​தாவது: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்​றியைப் பெற்​றதும், இங்கு வந்து உங்​களு​டன் பேசுவதும் மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது.

சஞ்சு சாம்​சன் எதிரணி​யினரை துணிச்​சலாக எதிர்​கொண்​டு, ஒரு அற்​புத​மான இன்​னிங்ஸை விளை​யாடி​னார். அவரது இன்​னிங்ஸ் அபார​மாக இருந்​தது. அதே​போல் இளம் வீரர் ஆயுஷ் மாத்​ரே​யும் மிகச் சிறப்​பாக விளை​யாடி​னார். ஆனால் இன்​றைய ஆட்​டத்​தின் முக்​கிய அம்​சம் பந்து வீச்​சு​தான் என்று நான் நினைக்​கிறேன். நடு​வரிசை ஓவர்​களில் விக்​கெட்​களை வீழ்த்​து​வதும், சிறந்த நீளத்​தில் (லெந்த்) பந்​துகளை ஆக்​ரோஷ​மாக வீசுவதும், வகுத்த திட்​டங்​களில் உறு​தி​யாக நிற்​பதும், ஆட்​டத்தை மிக​வும் எளிமை​யாக அணுகு​வதும்​தான் இன்​றைய வெற்​றிக்​கான காரணங்​கள் என்று நான் உறு​தி​யாக நம்​பு​கிறேன்.

எனவே, எங்​கள் பந்து வீச்​சாளர்​களின் இந்த முயற்சி குறித்து நான் மிக​வும் பெரு​மைப்​படு​கிறேன். சிறப்​பாக பந்​து​ வீசிய ஜேமி ஓவர்​டன், அன்​ஷுல் கம்​போஜ், கலீல் அகமது, குர்​ஜப்​னீத், நூர் அகமது ஆகிய அனை​வருக்​கும் பாராட்​டுக்​கள். எங்​கள் அணி​யிலுள்ள பந்​து​வீச்சு வரிசை​யில் நிச்​சய​மாக அந்த தனித்​து​வ​மான வீரர் இல்​லை​தான்.

ஆனால் ஒவ்​வொரு போட்​டி​யிலும் நாங்​கள் விவா​திப்​பது போல எப்​படிச் சிறப்​பாகச் செயல்​படு​வது, எப்​படி முன்​கூட்​டியே திட்​ட​மிட்​டுச் செயல்​படு​வது, எப்​படி எதிரணி அடிக்​கும் கூடு​தல் பவுண்​டரி​களைத் தடுப்​பது என்​ப​தில்​தான் எங்​கள் கவனம் இருந்​தது. கடந்த சில போட்​டிகளி​லும் நாங்​கள் வெற்​றிக்கு மிக அரு​கில் வந்​து​விட்​டோம் என்றே நினைக்​கிறேன்.

ஆனால் ஒன்று அல்​லது 2 ஓவர்​கள் மட்​டும் மிக மோச​மாக அமைந்​து, 20 அல்​லது 25 ரன்​களுக்கு மேல் விட்​டுக்​கொடுத்​ததே எங்​கள் தோல்விக்​குக் காரண​மாக அமைந்​தது. எனவே, இன்று நான் கூறியது போல, பந்​து​வீச்​சைப் பொறுத்​தவரை நாங்​கள் மிகத் துல்​லிய​மாகச் செயல்​பட்​டோம். பவர்​பிளே ஓவர்​களில் நாங்​கள்

சற்று தடு​மாறினோம். ஆனால் அதன்​பிறகு, நாங்​கள் மிகச் சிறப்​பாக மீண்டு வந்​தோம் என்று நினைக்​கிறேன். சென்னை ரசிகர்​கள் சூழ்​நிலை எது​வாக இருந்​தா​லும் எப்​போதும் எங்​கள் பின்​னால் உறு​துணை​யாக நிற்​கின்​றனர். எனக்​குப் பல செய்​தி​களும், நல்​வாழ்த்​துக்​களும் வந்து கொண்டே இருக்​கின்​றன.

நாங்​கள் எங்கு சென்​றாலும், எப்​போதும் எங்​களுக்கு ஆதர​வாக சென்னை ரசிகர்​கள் இருக்​கின்​றனர். அவர்​கள் எப்​போதும் எங்​களுக்​குத் துணை நிற்​கின்​றனர். வரும் போட்​டிகளி​லும் வெற்​றிகளைக் குவிக்க முயல்​வோம். இவ்​வாறு ருது​ராஜ் கெய்க்​வாட் தெரி​வித்​தார்.

“சிறப்​பான பந்​து​வீச்​சால் முதல் வெற்றியை பெற்றோம்” - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in