சூப்பர் ஓவரில் தோல்வி அடைய நிக்கோலஸ் பூரன் காரணமா? - லக்னோ பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் விளக்கம்

சூப்பர் ஓவரில் தோல்வி அடைய நிக்கோலஸ் பூரன் காரணமா? - லக்னோ பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் விளக்கம்
Updated on
2 min read

லக்னோ: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் லக்​னோ​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த கொல்​கத்தா அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 155 ரன்​கள் எடுத்​தது. ரிங்கு சிங் 51 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 83 ரன்​கள் விளாசி​னார்.

அதி​லும் திக்​வேஷ் ராதி வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் 4 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டிருந்​தார். இதன் காரண​மாகவே கொல்​கத்தா அணி​யால் போராடக்​கூடிய அளவி​லான இலக்கை கொடுக்க முடிந்​தது. 156 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு கட்டத்​தில் 19 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 139 ரன்கள் எடுத்​தது.

ஹிம்​மத் சிங், முகமது ஷமி ஆகியோர் களத்​தில் இருந்த நிலை​யில் கார்த்​திக் தியாகி வீசிய கடைசி ஓவரில் லக்னோ அணி​யின் வெற்​றிக்கு 17 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. முதல் பந்​தில் ஒரு ரன் சேர்க்​கப்பட்ட நிலை​யில் 2-வது பந்தை கார்த்​திக் தியாகி நோபாலாக வீசி​னார். இதற்கு மாற்​றாக வீசப்​பட்ட பந்​தும் நோ-பாலானது. பின்னர் மீண்​டும் வீசப்​பட்ட பந்​தில் ஹிம்​மத் சிங் பவுண்டரி அடித்​தார். இந்த வகை​யில் முதல் 2 பந்​துகளில் 9 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. 3-வது பந்​தில் ஹிம்​மத் சிங் ஆட்டமிழந்​தார்.

இதையடுத்து பிரின்ஸ் யாதவ் களமிறங்க 4-வது பந்​தில் ஒரு ரன் சேர்க்​கப்​பட்​டது. கடைசி 2 பந்​துகளில் லக்னோ அணி​யின் வெற்​றிக்கு 7 ரன்​கள் தேவை​யாக இருந்த நிலையில் 5-வது பந்​தில் முகமது ஷமி ரன் சேர்க்​க​வில்​லை. ஆனால் கடைசி பந்தை ஷமி, லாங் ஆஃப் திசை​யில் சிக்ஸருக்கு விளாச லக்னோ அணி 155 ரன்​களு​டன் இன்னிங்ஸை நிறைவு செய்​தது. இதனால் ஆட்​டம் டையில் முடிவடைந்​தது. எனவே வெற்​றியை தீர்​மானிக்க சூப்​பர் ஓவர் கடைபிடிக்​கப்​பட்​டது.

இதில் லக்னோ அணி முதலில் பேட் செய்​தது. பார்​மில் இல்லாத நிக்​கோலஸ் பூரன், எய்​டன் மார்க்​ர​முடன் களமிறங்​கி​னார். சுனில் நரைன் வீசிய இந்த ஓவரின் முதல் பந்​தில் நிக்​கோலஸ் பூரன் போல்​டா​னார். அடுத்து களமிறங்​கிய கேப்​டன் ரிஷப் பந்த் 2-வது பந்​தில் ஒரு ரன் சேர்த்​தார். 3-வது பந்தை எய்​டன் மார்க்​ரம் லாங் ஆன் திசையை நோக்கி விளாசி​னார். அப்​போது ரோவ்​மன் பவல் எல்​லைக்​கோட்​டுக்கு அருகே பந்தை பிடித்​தார்.

ஆனால், தான் எல்​லைக்​கோட்​டிற்கு வெளியே சென்​று​விடுவோம் என்​பதை உணர்ந்த அவர், லாங் ஆஃப் திசையில் நின்ற ரிங்கு சிங்கை நோக்கி பந்தை வீசி​னார். அவர், அதை கச்​சித​மாக பிடிக்க லக்னோ அணி அதிர்ச்சியில் உறைந்​தது. இதையடுத்து 2 ரன்​கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை​யில் கொல்​கத்தா அணி பேட் செய்​தது.

பிரின்ஸ் யாதவ் வீசிய முதல் பந்தை ரிங்கு சிங் பாயின்ட் திசை​யில் பவுண்​டரிக்கு விரட்ட கொல்​கத்தா அணி வெற்றி பெற்​றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. 8 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள கொல்கத்தா அணி 5 புள்​ளி​களுடன் 8-வது இடத்​தில் உள்ளது. லக்னோ அணிக்கு இது தொடர்ச்​சி​யான 5-வது தோல்​வி​யாக அமைந்​தது. 8 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 2 வெற்​றிகளு​டன் 4 புள்​ளி​கள் பெற்று கடைசி இடத்​தில் உள்​ளது.

லக்னோ அணி சூப்​பர் ஓவரில் தோல்வி அடைவதற்கு பார்மில் இல்​லாத நிக்​கோலஸ் பூரனை களமிறக்​கியதே காரணம் என கிரிக்​கெட் விமர்​சகர்​கள் கருதுகின்​றனர். ஏனெனில் நடப்பு சீசனில் நிக்​கோலஸ் பூரன் 8 ஆட்டங்களில் விளை​யாடி 82 ரன்​கள் மட்​டுமே சேர்த்துள்ளார். இதில் அவரது அதி​கபட்ச ஸ்கோர் 22 ஆகும். இந்​நிலை​யில் கொல்​கத்தா அணிக்கு எதி​ரான ஆட்டத்துக்கு பின்​னர் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமை பயிற்​சி​யாள​ரான ஜஸ்​டின் லாங்​கர் கூறிய​தாவது: சூப்​பர் ஓவரில் சுனில் நரைன் பந்​து​வீசு​வார் என்று எங்​களுக்​குத் தெரி​யும்.

உலக கிரிக்​கெட்​டில் மற்ற எந்த வீரரை விட​வும் நிக்கோலஸ் பூரன், சுனில் நரைனின் பந்​து​வீச்சை அதி​கம் எதிர்​கொண்​டிருக்​கிறார். எனவே சுனில் நரைனின் பந்​து​ வீச்சை எதிர்​கொள்ள நிக்​கோலஸ் பூரனே சிறந்த தேர்​வாக இருப்​பார் என்று நாங்​கள் உணர்ந்தோம். நிக்​கோலஸ் பூரன் நடப்பு தொடரில் இன்​னும் தனது சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்​த​வில்லை என்​பது எனக்​குத் தெரி​யும்.

அதை நிக்​கோலஸ் பூரனும் ஒப்​புக்​கொள்​வார். ஆனால் சூப்பர் ஓவரை கையாள்​வதற்கு நிக்​கோலஸ் பூரனே சரியாக இருப்​பார் என்று நாங்​கள் நினைத்​தோம். எப்போதும் சிறந்த வீரர்​களை ஆதரிக்க வேண்​டும். நிக்கோலஸ் பூரன் தடு​மாறி இருக்​கலாம். ஆனால் புள்​ளி​ விவரங்​களைப் பார்த்​தால், உலகத்​தரம் வாய்ந்த ஆஃப்​-ஸ்​பின்​ன​ரான சுனில் நரைனின் பந்​து​வீச்சை நிக்​கோலஸ் பூரனை விட யாரும் சிறப்​பாக எதிர்​கொண்​ட​தில்​லை. துரதிர்​ஷ்ட​வச​மாக, அது இந்த ஆட்​டத்​தில் நிகழ​வில்​லை.

கடந்த சில ஆண்​டு​களில், உலகிலேயே நிக்​கோலஸ் பூரனை விடச் சிறந்த டி 20 வீரர் யாரும் இருக்க முடி​யாது. தற்​போதைய நிகழ்வு அவரும் ஒரு மனிதர்​தான் என்​ப​தைக் காட்​டு​கிறது.

தன்​னம்​பிக்​கையை நாம் போலி​யாக உரு​வாக்க முடி​யாது. நாங்​கள் அனை​வரும் முயற்சி செய்​கிறோம். நாங்​கள் நம்​பிக்​கை​யுடன் இருப்​ப​தாகத் தோன்​றலாம், ஆனால் ஒரு​வருக்​கான உண்​மை​யான தன்​னம்​பிக்கை என்​பது தனது செயல் பாடு​களை சரி​யாகச்​ செய்​வ​திலிருந்​து மட்​டுமே கிடைக்​கும்​. இவ்​வாறு அவர் கூறினார்.சூப்பர் ஓவரில் சுனில் நரைன் பந்தில் போல்டான நிக்கோலஸ் பூரன்.

சூப்பர் ஓவரில் தோல்வி அடைய நிக்கோலஸ் பூரன் காரணமா? - லக்னோ பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் விளக்கம்
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in