உலக கோப்​பை​யில் தங்​கம் வென்ற தமிழக ரோல்​பால் வீரர்​களுக்கு உற்​சாக வரவேற்பு

உலக கோப்​பை​யில் தங்​கம் வென்ற தமிழக ரோல்​பால் வீரர்​களுக்கு உற்​சாக வரவேற்பு
Updated on
1 min read

சென்னை: உலக கோப்பை ரோல்​பால் போட்​டி​யில் தங்​கம் வென்ற இந்​திய அணி​யில் பங்​கேற்ற தமிழக வீரர்​கள் மற்​றும் பயிற்​சி​யாளர்​களுக்கு சென்​னை​யில் உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

சர்​வ​தேச ரோல் பால் கூட்​டமைப்பு சார்​பில் 7-வது உலகக்​கோப்பை தொடர் துபா​யில் நடை​பெற்​றது. இதில் இந்​தி​யா, கென்​யா, இலங்​கை, சவுதி அரேபி​யா, ஈரான், பிரான்​ஸ், பாகிஸ்​தான், பிலிப்​பைன்​ஸ், எகிப்து உள்​ளிட்ட 16 நாடு​களை சேர்ந்த இரு​பாலர் அணி​களும் பங்​கேற்​றன.

இதில், மகளிர் பிரி​வில் இந்​திய அணி 3-வது முறை​யும், ஆடவர் பிரி​வில் 5-வது முறை​யும் சாம்​பியன் பட்​டத்தை கைப்​பற்​றியது. தங்​கம் வென்ற இந்​திய அணி​யில், திண்​டுக்​கல் மாவட்​டத்தை சேர்ந்த மது​மி​தா, தீபக்​ராஜ் மற்​றும் கோவையை சேர்ந்த மகதி ஆகிய மூவர் பங்​கேற்று சிறப்​பாக விளை​யாடினர்.

பயிற்​சி​யாள​ராக தமிழகத்​தைச் சேர்ந்த கோயம்​புத்​தூர் ராஜசேகர், திண்​டுக்​கல் சுஷ்மிதா ஆகியோ​ரும் இடம் பெற்​றிருந்​தனர். தமிழக வீரர்​கள் மற்​றும் பயிற்​சி​யாளர்​கள் நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்​தனர்.

சென்னை விமான நிலை​யத்​தில் அவர்​களுக்கு ரோல் பால் சங்​கம் சார்​பில் உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. நிகழ்ச்​சி​யில் தென்​னிந்​திய ஒருங்​கிணைப்​பாளர் சுப்​பிரமணி​யம், தமிழ்​நாடு ரோல் பால் சங்​கத் தலை​வர் செல்​ல​முத்​து, செய​லா​ளர் கோவிந்​த​ராஜ் துணைத்​தலை​வர் பிரேம​நாத் மற்​றும் சரவணன், துணை செயலர் மணி​கண்​டன், சர்​வ​தேச ரோல்​பால் சங்க இயக்​குனர் ஸ்டீபன் டேவிட், மதுரை மாவட்ட தலை​வர் ராபின் ராஜ​காந்​தன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்.

உலக கோப்​பை​யில் தங்​கம் வென்ற தமிழக ரோல்​பால் வீரர்​களுக்கு உற்​சாக வரவேற்பு
சூர்யகுமார் தலைமையில் டி20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு: இஷான் உள்ளே, கில் வெளியே!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in