ஆகஸ்ட் 4 முதல் பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி

ஆகஸ்ட் 4 முதல் பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான சிறுவர், சிறுமியர் வாலிபால் சாம்​பியன்​ஷிப் போட்டி எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் வரும் ஆகஸ்ட் 4 முதல் 6-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

இந்த போட்​டியை சென்னை மாவட்ட வாலி​பால் சங்​கம், எஸ்​ஏஎன் அகாடமி பள்​ளி​கள் குழு​மம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. தொடக்க நாள் மட்டும் வீரர், வீராங்கனைகளுக்கு காலை உணவும், மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொடரில் கலந்து கொள்ள விரும்​பும் அணி​கள் தகுந்த சான்றிதழ்​களு​டன் வரும் 30-ம் தேதிக்​குள் போட்டி அமைப்பாளர்களை அணுகலாம். இத்​தகவலை சென்னை மாவட்ட வாலி​பால் சங்​கத்​தின் செய​லா​ளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்​துள்​ளார்​.

ஆகஸ்ட் 4 முதல் பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி
உக்ரைனில் வணிக கப்பல் தாக்கப்பட்டு 4 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in