பிஃபா டிராபியின் மதிப்பு முதல் சாம்பியனுக்கு ரூ.478 கோடி பரிசு வரை | FIFA WC 2026

பிஃபா டிராபியின் மதிப்பு முதல் சாம்பியனுக்கு ரூ.478 கோடி பரிசு வரை | FIFA WC 2026
Updated on
1 min read

டிராபியின் மதிப்பு ரூ.191 கோடி

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கு வழங்கப்படும் உலகக் கோப்பைக் கோப்பை டிராபியானது 36.8 சென்டிமீட்டர் உயரமும், 6.2 கிலோகிராம் எடையும் கொண்டது. இது பெரும்பாலும் தங்கத்தால் ஆனது, அதன் அடிப்பகுதியில் உள்ள பச்சை நிற வளையங்கள் மாலக்கைட் கல்லால் ஆனவை.

இதன் மதிப்பு சுமார் 15 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.191 கோடி) எனக் கூறப்படுகிறது. வெற்றியாளர்கள் கோப்பையை வீட்டிற்கு எடுத்துச் அனுமதிக்கப்படுவது இல்லை. அவர்களுக்கு வெண்கலத்தால் ஆன அதன் பிரதி ஒன்று வழங்கப்படுகிறது. அசல் கோப்பை சுவிட்சர்லாந்தில் உள்ள பிஃபா அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

சாம்பியனுக்கு ரூ.478 கோடி பரிசு

2026-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மொத்த பரிசுத் தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.சுமார் ரூ.6,943 கோடி ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணி சுமார் ரூ.478 கோடியை தட்டிச் செல்லும். 2-வது இடத்தை பெறும் அணி ரூ.315.1 கோடியையும், 3-வது இடத்தை பெறும் அணி ரூ.276.9 கோடியையும், 4-வது இடத்தை பெறும் அணி ரூ.257.8 கோடியையும் பெறும். மொத்தத்தில் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் அணிகள் குறைந்தபட்சம் ரூ.100 கோடியை பரிசாக பெறும்.

3 சின்னங்கள்

2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துவதால் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ சின்னங்களாக மூன்று உருவங்கள் இடம்பெற்றுள்ளன மேப்பிள் என்ற மூஸ் (கனடா), ஸாயு என்ற ஜாகுவார் (மெக்சிகோ), கிளட்ச் என்ற வழுக்கைத் தலைக் கழுகு (அமெரிக்கா) ஆகியவை சின்னங்களாக உள்ளன.

பிஃபா டிராபியின் மதிப்பு முதல் சாம்பியனுக்கு ரூ.478 கோடி பரிசு வரை | FIFA WC 2026
கால்களின் திருவிழா இன்று கோலாகல தொடக்கம் | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in