

மும்பை: ஆடவருக்கான யு-23 மாநில ‘ஏ’ ஒன்டே டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - உத்தர பிரதேசம் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணி 49.3 ஓவர்களில் 297 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
எஸ்.ஆர்.ஆதிஷ் 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசினார். முகமது அலி 57, மானவ் பராக் 57, பூபதி வைஷ்ஷ குமார் 37, ஆர்.கே.ஜெயந்த் 32 ரன்கள் சேர்த்தனர். உத்தர பிரதேச அணி தரப்பில் பிரசாந்த் வீர் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 298 ரன்கள் இலக்குடன் பேட் செய்த உத்தரபிரதேசம் அணி 47.5 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக பிரசாந்த் வீர் 65 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசினார். சமீர் ரிஸ்வி 41 ரன்கள் சேர்த்தார். தமிழக அணி சார்பில் முகமது அலி 46 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.