மெக்கல்லம்மின் பாஸ்பாலுக்கு ‘ஆப்பு’ வைத்த இரண்டு ஸ்மித்கள்!

பிரெண்டன் மெக்கல்லம், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கிரேம் ஸ்மித்

பிரெண்டன் மெக்கல்லம், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கிரேம் ஸ்மித்

Updated on
2 min read

இன்று பாஸ்பால் என்று புகழுக்கும் இகழுக்கும் ஆளாகியிருக்கும் பிரெண்டன் மெக்கல்லம் பாணி அதிரடி கிரிக்கெட் வகையறாவுக்கு அன்றே தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித்தும், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் ஆப்பு வைத்துள்ளனர் என்பதுதான் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கப்பட்ட விஷயம்.

2013-ல் நியூஸிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன்சியை ராஸ் டெய்லரிடமிருந்து பெற்றார் பிரெண்டன் மெக்கல்லம். 31 போட்டிகளில் கேப்டன்சி செய்து 11-ல் வென்று 11-ல் தோற்று 9 போட்டிகளில் டிரா செய்துள்ளார்.

2014-2015 இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் 17 டெஸ்ட்களில் 9 டெஸ்ட்களை நியூஸிலாந்து வென்றது என்பது 2 ஆண்டுகளில் நியூஸிலாந்து பெற்ற அதிக டெஸ்ட் வெற்றிகள் என்பதும் குறிப்பிடத்தக்கதே. மற்றபடி மெக்கல்லமின் அணுகுமுறைக்கு தென் ஆப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ஆப்பு வைத்திருக்கின்றன என்பதுதான் விஷயம்.

அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவிலும் சரி, நியூஸிலாந்திலும் சரி நியூஸிலாந்து அணி 1993/94 தொடரிலிருந்தே ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வெல்லவில்லை என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம், ட்ரான்ஸ்-டாஸ்மேனியன் ரைவல்ரி என்று அழைக்கப்படும் ஆஷஸ் தொடருக்குப் பிறகான பிரபல டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியாவே முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கடைசியாக நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வென்றது நியூஸிலாந்தில் 1989-90-ல் நடைபெற்ற தொடரில் ஒரே டெஸ்ட் போட்டியில் 1-0 என்று வென்று தொடரை வென்றது. நியூஸிலாந்தைப் பொறுத்தவரை பொற்காலம் என்பது 1985-86 சீசன் தான். அதில் ரிச்சர்ட் ஹாட்லி என்னும் மாமேதை ஸ்விங் பவுலர் தன் உச்சத்தில் இருந்தார்.

அவரால் ஆஸ்திரேலியாவில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து 2-1 என்றும் பிறகு நியூஸிலாந்தில் அதே சீசனில் நடைபெற்ற தொடரில் 3 டெஸ்ட்களில் நியூஸிலாந்து 1-0 என்று தொடரைக் கைப்பற்றியது. மற்றபடி பார்த்தால் ஆஸ்திரேலியாவிடம் செம உதை வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது நியூஸிலாந்து.

பிரெண்டன் மெக்கல்லம் கேப்டன்சிக்கு வந்த பிறகும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது பாஸ்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது தான் விஷயம். 2015-16 சீசனில் இரண்டு தொடர்கள் மெக்கல்லம் கேப்டன்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் 2-0 என்று நியூஸிலாந்து உதை வாங்குகிறது, அப்படியே நியூசிலாந்துக்குச் சென்றால் அங்கு 2 டெஸ்ட் போட்டிகளிலும் செம உதை வாங்கி 2-0 என்று தோற்கிறது.

இந்த 2 தொடர்களிலுமே ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆஷஸில் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியில் ஆடிக்கொண்டிருக்கிறார், மெக்கல்லம் இங்கிலாந்தின் கோச் ஆக இருக்கிறார். நடப்பு ஆஷஸ் தொடரிலும் ஸ்டீவ் ஸ்மித் பெர்த்திலும் பிரிஸ்பனிலும் பயிற்சியாளர் மெக்கல்லமின் பாஸ்பால் பிலாசபிக்கு செம உதையை வழங்கினார் ஆக்டிங் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்.

கேப்டன்சி கையில் வந்த முதல் இன்னிங்ஸே 45 ஆல் அவுட் ஆன நியூஸிலாந்து!

ஆனால் முதன் முதலில் பிரெண்டன் மெக்கல்லம்மின் இந்த தத்துவத்திற்கு ஆப்பு வைத்தவர் தென் ஆப்பிரிக்கா கேப்டன் கிரேம் ஸ்மித் தான். முதன் முதலாக பிரெண்டன் மெக்கல்லம் நியூஸிலாந்து கேப்டனாகி தென் ஆப்பிரிக்கா செல்கிறது நியூஸிலாந்து அணி.

அதில் இன்றைய தினமான ஜனவரி 2ம் தேதி 2013ம் ஆண்டில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாஸ்பால் ஆக்ரோஷ கேப்டன் மெக்கல்லம் கிரீன் டாப் பிட்சில் அதுவும் டேல் ஸ்டெய்ன், பிலாண்டர், மோர்னி மோர்கெல் பவுலிங்குக்கு எதிராக அசட்டுத் தைரியமாக முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய 19.2 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்கா.

கிளென் மெக்ராவின் வாரிசு என்று வர்ணிக்கப்பட்ட வெர்னன் பிலாண்டர் 5 விக்கெட், ஸ்டெய்ன் 2, மோர்னி மோர்கெல் 3. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அல்விரோ பீட்டர்சனின்106 ரன்கள், காலிஸ் 60, ஏ.பி.டிவில்லியர்ஸ் 67, பங்களிப்புகளுடன் 347/8 என்று டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 275 ரன்களுக்கு 2வது இன்னிங்சில் சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்களில் படுதோல்வி கண்டது.

சரி முதல் டெஸ்ட்தான் இப்படி ஆனது என்றால் 2வது டெஸ்ட்டில் பாஸ்பால் எழுச்சியுறும் என்று ஆவலுடன் காத்திருந்தால், போர்ட் எலிசெபத்தில் நடந்த அந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் கிரேம் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இது பேட்டிங் பிட்ச். ஹஷிம் ஆம்லா 110 ரன்களை எடுக்க டுபிளெசிஸ் 137, டீன் எல்கர் 103 என்று வறுத்து எடுக்க தென் ஆப்பிரிக்கா 525/8 என்று டிக்ளேர் செய்தது.

சரி! இது பேட்டிங் பிட்ச்தானே, பாஸ்பால் மெக்கல்லமின் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் எடுத்த ஸ்கோர் என்ன தெரியுமா? டேல் ஸ்டெய்ன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் 121 ரன்களுக்குச் சுருண்டு பாலோ ஆனுக்குத் தள்ளப்பட்டது. 2வது இன்னிங்ஸில் 211-க்கு ஆல் அவுட். மீண்டும் ஸ்டெய்ன் 3 விக்கெட்டுகள்.

இப்படியாக பாஸ்பால் மெக்கல்லமின் கேப்டன்சியில் கிரேம் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித் நியூஸிலாந்துக்கு செம ஆப்பு வைக்க, இப்போது பயிற்சியாளராக வந்த பிறகும் ஸ்டீவ் ஸ்மித் பெர்த், பிரிஸ்பனில் பாஸ்பாலுக்கு ஆப்பு வைத்ததுதான் நடந்தது. இங்கிலாந்து நிர்வாகம் ஒருவேளை இந்த புள்ளி விவரங்களைப் பார்த்திருந்தால் தலைமைப் பயிற்சியாளராக மெக்கல்லமை நியமிப்பதை ஒருவேளை ஒத்தி வைத்திருக்கலாம்.

<div class="paragraphs"><p>பிரெண்டன் மெக்கல்லம், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கிரேம் ஸ்மித்  </p></div>
அவன் கதவைத் தட்டல... இடிச்சி உடைச்சிட்டிருக்கான்... - சர்​பி​ராஸ் கான் குறித்து அஸ்வின்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in