முத்தரப்பு ஒருநாள் தொடர்: வங்கதேசத்தை வெளியேற்றி இறுதிக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான்!

முத்தரப்பு ஒருநாள் தொடர்: வங்கதேசத்தை வெளியேற்றி இறுதிக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான்!
Updated on: 
1 min read

யுஏஇ-யில் நடைபெற்று வரும் ஒருநாள் முத்தரப்பு தொடரில் நேற்று ஷார்ஜாவில் பகலிரவு ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வேயைச் சந்திக்கின்றது.

ரஷீத் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, முதலில் பேட் செய்த வங்கதேசம் 41.2 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்தது. விக்கெட் கீப்பர் பர்வேஸ் ஹுசைன் இமான் 70 ரன்களை எடுக்கவில்லை எனில், மிக மிக மோசமான நிலையில் வங்கதேசம் முடிந்திருக்கும்.

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஹ்மத் ஷாவின் நிதானமான 67 ரன்களினால் 35.3 ஓவர்களில் 161/3 என்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வேயைச் சந்திக்கின்றது.

முதலில் பேட் செய்த வங்கதேசத்தின் முதல் 4 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களான யமீன் அகமத்சாய், அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஆகியோர் கைப்பற்றினர். முதல் 7 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் காலியானது.

காயமடைந்த லிட்டன் தாஸுக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட புதிய விக்கெட் கீப்பர் பர்வேஸ் ஹுசைன் இமான் அருமையாக ஆடினார். ரஷீத் கான், முகமது நபி பந்துகளை நன்றாக ஸ்வீப் ஆடினார். பிலால் சமி பந்தை சிக்சருக்குத் தூக்கினார். சயீஃப் ஹசன் (41), இமான் அமைத்த 93 ரன்கள் கூட்டணி சயீஃப் விக்கெட்டை நபி வீழ்த்த முடிவுக்கு வந்தது.

அதன்பிறகே வங்கதேசத்தின் நீண்ட பின் வரிசை ரஷீத் கானிடம் சிக்கியது. 160 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து பந்து வீசிய வங்கதேசம் ஆப்கனின் அபாய தொடக்க வீரர் குர்பாஸை டஸ்கின் அகமது பவுல்டு செய்தது மூலம் பாசிட்டிவ் ஆகத் தொடங்கியது. செதிக்குல்லா அடல் நச்சுனு ஒரு பவுண்டரி அடித்து டஸ்கினின் அற்புதமான ரவுண்ட் த விக்கெட் இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆக்கினார்.

இப்ரஹிம் ஜத்ரான் 34 எடுத்து ஸ்திரம் கொடுத்தாலும் இவரை முஸ்தபிசுர் வீழ்த்தும் போது ஸ்கோர் 95/3 என்று வங்கதேசத்துக்கு கொஞ்சம் இடைவெளியில் வெளிச்சம் தெரிந்தது. ஆனால் கேப்டன் ரஹ்மத் ஷா (67), ஹஸ்மத்துல்லா ஷஹீதி (36) மேலும் சேதமில்லாமல் வெற்றியில் முடித்தனர். இருவரும் ஆட்டமிழக்காமல் 66 ரன்களைச் சேர்த்தனர்.

முத்தரப்பு ஒருநாள் தொடர்: வங்கதேசத்தை வெளியேற்றி இறுதிக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான்!
தங்கம், போதைப் பொருட்கள் கடத்தலின் வழித்தடமாகும் நாகை கடற்கரை - தொடரும் அத்துமீறல்களும் பின்னணியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in