“என்னை ஆல்ரவுண்டராக வளர்க்க விரும்புகிறார்கள்” - ஹர்ஷித் ராணா

“என்னை ஆல்ரவுண்டராக வளர்க்க விரும்புகிறார்கள்” - ஹர்ஷித் ராணா
Updated on
1 min read

வதோதரா: நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக நேற்று முன்தினம் வதோத​ரா​வில் நடை​பெற்ற முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 301 ரன்​கள் இலக்கை விரட்​டிய இந்திய அணி 6 பந்​துகளை மீதம் வைத்து 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இறு​திக் கட்ட ஓவர்களில் வேகப்​பந்து வீச்​சாள​ரான ஹர்ஷித் ராணா பேட்​டிங்​கில் அதிரடி​யாக செயல்​பட்டு 23 பந்​துகளில், 29 ரன்​கள் சேர்த்து அணி​யின் வெற்றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார்.

விராட் கோலி (93), ரவீந்​திர ஜடேஜா (4), ஸ்ரேயஸ் ஐயர் (49) ஆகியோர் அடுத்​தடுத்து ஆட்​ட​மிழந்த நிலை​யில் 6-வது விக்​கெட்​டுக்கு கே.எல்​.​ராகுலுடன் இணைந்து ஹர்​ஷித் ராணா 37 ரன்​கள் சேர்த்து அசத்​தி​னார். முன்​ன​தாக பந்​து​வீச்​சில் முக்​கிய​மான கட்​டத்​தில் 2 விக்​கெட்​களை கைப்​பற்றி திருப்பு முனையை​யும் அவர், ஏற்​படுத்​திக் கொடுத்​திருந்​தார்.

போட்டி முடிவடைந்​ததும் ஹர்​ஷித் ராணா கூறிய​தாவது: இந்​திய அணி நிர்​வாகம் என்னை ஒரு ஆல்​ர​வுண்​ட​ராக வளர்க்க விரும்​பு​கிறது, அதற்​காக தொடர்ந்து பணி​யாற்றி வரு​கிறேன். வலை பயிற்​சி​யின் போது பேட்​டிங்​கிலும் கவனம் செலுத்​துகிறேன். இதில் நம்​பிக்​கை​யும் அடங்கி உள்​ளது. களத்​தில் கே.எல்​.​ராகுல் உதவி​யாக இருந்​தார். முழு கவனத்​தை​யும் செலுத்தி ரன்​கள் சேர்த்​தேன்.

அணி நிர்​வாகம் நான், 8-வது இடத்​தில் ஆல்​ர​வுண்​ட​ராக பேட்​டிங் செய்ய வேண்​டும் என்று விரும்​பு​கிறது. வலைப்​ப​யிற்​சி​யின் போது பேட்​டிங்​கிற்கு எவ்​வளவு நேரம் ஒதுக்க முடி​யுமோ அவ்​வளவு நேரம் ஒதுக்கி கவனம் செலுத்​துகிறேன். தேவைப்​படும் போதெல்​லாம் கீழ் வரிசை​யில் களமிறங்கி அணிக்​காக 30 முதல் 40 ரன்​கள் எடுக்க முடியும் என்று நான் நம்​பு​கிறேன். அதை என்​னால் செய்ய முடி​யும் என்று அணி நிர்​வாக​மும் நம்​பு​கிறது.

விராட் கோலி களத்​தில் இருந்​த​தால் ஆட்​டம் விரை​வாக முடிவடை​யும் என்று நினைத்​தேன். அவர், கடைசி வரை களத்தில் இருந்​திருந்​தால் 5 முதல் 6 ஓவர்​களை மீதம் வைத்து ஆட்டத்தை முடித்​திருப்​போம். ஆனால் ஆட்​டம் எப்​போது வேண்​டு​மா​னாலும் மாறலாம்.

அதை கணிக்க முடி​யாது. பந்​து​வீச்​சில் தொடக்​கத்​தில் நாங்​கள் விக்​கெட்​களை வீழ்த்​தா​விட்​டாலும் ரன்​களை அதி​கம் விட்​டுக்​கொடுக்​க​வில்​லை. ஆனால் இவை நடக்கும், நாங்​கள் தொடக்கத்தில் விக்​கெட்​​களை வீழ்த்தவில்லை என்​றால், பிற்​பகு​தி​யில் விக்​கெட்​களை வீழ்த்​து​வோம். ஒரு​நாள் கிரிக்​கெட்​டில் வெவ்​வேறு கட்டங்கள் உள்​ளன. ஆடு​களம் மெது​வாக இருப்​ப​தாக உணர்ந்​தேன், அதிக பவுன்​ஸ் கூட இல்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

“என்னை ஆல்ரவுண்டராக வளர்க்க விரும்புகிறார்கள்” - ஹர்ஷித் ராணா
‘நான் களமிறங்குவதற்காக எனக்கு முன்னால் விழும் விக்கெட்டை கொண்டாடுவதா?’ - விராட் கோலி வருத்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in