

திருவனந்தபுரம்: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்டு சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி சொந்த மண்ணில் நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களை இழந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை அணுகுகிறது.
இந்திய அணி ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது. உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்தத் தொடர் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதில் விராட் கோலி 15 ஆயிரம் ரன்கள் மைல்கல் சாதனையை எட்டுவதற்கு இன்னும் 51 ரன்கள் தேவையாக உள்ளது. இதை அவர், இன்றைய ஆட்டத்தில் சேர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.