

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தன்று, காலே (Galle) மைதானத்தில் இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தனது 600-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது; இதன் மூலம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டும் மூன்றாவது அணியாக இந்திய அணி திகழ்கிறது.
1932-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகத் தொடங்கிய பயணம் இது. முதல் 100 டெஸ்ட்களுக்கு 35 ஆண்டுகள் ஆனது, ஆனால் அடுத்தடுத்து 200 மற்றும் 300-வது டெஸ்ட் மைல்கற்களை முறையே 15 மற்றும் 14 ஆண்டுகளில் எட்டியது. அதன் பிறகே சுமார் 10 ஆண்டுகளில் அடுத்தடுத்த 100 டெஸ்ட் போட்டிகள் மைல்கற்களை எட்டியது.
இந்தியா தனது முதல் 300 டெஸ்ட் போட்டிகளில் 56 வெற்றிகளைப் பெற்றிருந்தது; இது மிகச் சமீபத்திய காலகட்டத்தில் பெறப்பட்ட வெற்றிகளின் எண்ணிக்கைக்குச் சமமாகும். ஆட்டங்கள் சமநிலையில் முடிவடைவது கணிசமாகக் குறைந்ததால், இக்காலகட்டத்தில் இந்தியா 31 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது.
கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவிலேயே அதிக டெஸ்ட் போட்டிகள் ஆடியதும் டாஸ் சாதகமும் இந்திய அணியை டெஸ்ட் அரங்கில் உயர்த்தியது எனலாம். சமீபத்திய தோல்விகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் மொத்தக் கணக்கு 186 வெற்றிகள் 188 தோல்விகளாக உள்ளது.
சமீபத்திய 100 டெஸ்ட் போட்டிகள் கொண்ட காலகட்டத்தில், இந்தியா தனது சொந்த மண்ணில் 50 போட்டிகளில் விளையாடி 35-ல் வெற்றியும், ஒன்பதில் மட்டுமே தோல்வியும் கண்டது; இதில் கடந்த எட்டு போட்டிகளில் ஐந்து தோல்விகள் அடங்கும். 2006 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் அதாவது, ஐந்தாவது 100 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொகுப்பில், இந்தியா சொந்த மண்ணில் 42 போட்டிகளில் விளையாடி 26-ல் வெற்றியும், நான்கில் மட்டுமே தோல்வியும் அடைந்தது.
அதேபோல, அயல்நாட்டு மைதானங்களில் இந்திய அணியின் செயல்பாடும் கணிசமாக மேம்பட்டது; முதல் நான்கு கட்டங்களில் 193 போட்டிகளில் 26-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், அடுத்த இரண்டு கட்டங்களில் 107 போட்டிகளில் 37-ல் இந்திய அணியினர் வெற்றி பெற்றனர்.
கடைசி 100 போட்டிகள் காலக்கட்டத்தில் விராட் கோலி, பெரிய கேப்டனாக எழுச்சி பெற்ற காலக்கட்டம். இந்தக் காலக்கட்டத்தில்தான் 68 டெஸ்ட்களில் இந்திய அணி, கோலியின் தலைமையில் 40 டெஸ்ட்களில் வென்று அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தது.
இப்போது டெஸ்ட் போட்டிகளில் சிறு வீழ்ச்சியைத் தொடர்ந்து அணியின் ஆட்டம் மேம்பட்டு எழுச்சி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.