

லக்னோ: சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மாவை 11-21, 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தாய்லாந்தின் சுபனிதா கேத்தேதாங் சாம்பியன் பட்டம் வென்றார்.
மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 24-22, 12-21, 19-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் இஸ்யானா, ரிஞ்சானி க்வின்னாரா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.