

புதுடெல்லி: 36-வது சீனியர் தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிருக்கான ஃபாயில் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழ்நாடு 45-36 என்ற கணக்கில் மணிப்பூரை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது. மகளிருக்கான சேபர் பிரிவு இறுதிப் போட்டியில் ஹரியானா 45-44 என்ற கணக்கில் பஞ்சாபை தோற்கடித்து தங்கம் வென்றது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவை வெண்கலப் பதக்கம் கைப்பற்றின.