

திருச்சி: 15-வது மினி தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி கே.கே. நகரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட 20 மாநிலங்களை சேர்ந்த 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிறுமியர் பிரிவில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சிறுவர் பிரிவில் தமிழ்நாடு அணி 6 - 7 என்ற கோல் கணக்கில் அசாம் அணியிடம் தோல்வி அடைந்து 2-வது இடம் பிடித்தது.
திருச்சி வேலம்மாள் போதி கேம்பஸில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு காவல்துறை மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், இந்திய ரோல்பால் சம்மேளன செயலாளர் பிரதாப் பகர், தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், தமிழ்நாடு ரோல் பால் சங்க பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.
தமிழ்நாடு ரோல் பால் சங்க துணைத் தலைவர்கள் சரவணன், பிரேம்நாத், பொருளாளர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.