

சென்னை: விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டி தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் டிசம்பர் 24-ம் தேதி முதல் 2026-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக நாராயன் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்: நாராயன் ஜெகதீசன் (கேப்டன்), சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், பிரதோஷ் ரஞ்ஜன் பால், ஆந்த்ரே சித்தார்த், பூபதி வைஷ்ண குமார், முகமது அலி, ஆதிஷ், சாய் கிஷோர், சச்சின் ராதி, குர்ஜப்னீத் சிங், சி.வி.அச்யுத், ஜி.கோவிந்த், சோனு யாதவ், ஷன்னி சாந்து, கார்த்திக் மணிகண்டன்.